கிரைம் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
01:03

விஷம் குடித்த பெண் பலி

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அமுதா,42; பெங்களூரில் உள்ள தனது மகள் நிர்மலாவை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் ரயிலில் செல்வதற்காக சின்னசேலம் சென்றுள்ளார். அங்கு, பகல் 1:30 மணியளவில் அமுதாவின் மொபைலுக்கு தொடர்பு கொண்ட உறவினர், அவரது மகள் நிர்மலா இறந்த விட்டதாக கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த அமுதா, சின்னசேலம் பழைய பஸ் நிலையத்தில் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்தவர்கள், நிர்மலாவை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



மஞ்சள் காமாலையால் பெண் பலி

கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி, 40; என்பவரின் மகள் சங்கவி, 20; இவருக்கும் சுமதியின் அண்ணன் மகன் ராஜசேகர் என்பவருக்கும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 7ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சங்கவி, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை, பரிதாபமாக இறந்தார்.

இது குறித்துசங்கவியின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



கார் மோதி இளம்பெண் சாவு

கள்ளக்குறிச்சி அடுத்த மோகூரைச் சேர்ந்த வீரமுத்து மனைவி பட்டுரோஜா,38; இவர், கடந்த 17 ம் தேதி தனது மகன் கோவிந்தராஜ்,14; என்பவரை அழைத்து கொண்டு, உறவினர் பிச்சன் என்பவருடன் டிவிஎஸ் மொபட்டில் உலகங்காத்தான் நோக்கி சென்றார். ஏமப்பேர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது, சேலம் - சென்னை நோக்கி சென்ற இனோவா கார், மொபட் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பிச்சன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், பட்டுரோஜா, அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோரை சென்னை அரசு மருத்துவமனையிலும் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பட்டுரோஜா இறந்தார்.

விபத்து குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்பூத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் மூர்த்தி‚ 49; நேற்று முன்தினம், திருக்கோவிலுார் அடுத்த தானம் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். மாமனாருக்கு சொந்தமான கிணற்றில் துார்வாருவதற்காக பூஜை போட்டனர். இதனை பார்க்கச் சென்ற மூர்த்தி, கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி திலகம்‚ 39; கொடுத்த புகாரின்பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



மரக்காணம் அருகே மூதாட்டி பிணம்

மரக்காணம் அருகே உள்ள மீனவ கிராமமான, எக்கியர்குப்பத்தில் கடந்த இரண்டு நாட்களாக அடையாளம் தெரியாத 65வயது மதிக்கத்தக்க மூதாட்டி, சுற்றித் திரிந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, ஒரு வீட்டின் அருகே, இறந்து கிடந்தார். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



தீக்காயமடைந்த பெண் பலி

திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி சத்யா‚ 28; கடந்த 16ம் தேதி வீட்டு வாசலில் உள்ள அடுப்பில் விறகு அடுப்பு பற்ற வைக்கும்போது, அவரது சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு‚ அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு,நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X