| திருட்டு முயற்சி வாலிபர் கைது Dinamalar
திருட்டு முயற்சி வாலிபர் கைது
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2018
02:55

திருக்கனுார்:திருக்கனுார் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் வேலு நேற்று முன்தினம், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, கூனிச்சம்பட்டு பாரதியார் கிராம வங்கி அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன், தப்பி ஓட முயன்றார். போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து, விசாரணை நடத்தியதில், கரிக்கலாம்பாக்கம் பழைய வங்கி வீதியை சேர்ந்த சக்திவேல் 34, என்பதும், திருக்கனுார் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது.

போலீசார் சக்திவேலை கைது செய்தனர். அவர் மீது நெட்டப்பாக்கத்தில் ஒரு திருட்டு வழக்கும், ரெட்டியார்பாளையத்தில் 2 அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X