| ஜூனியர் கபடி போட்டி 14ம் தேதி வீரர்கள் தேர்வு Dinamalar
ஜூனியர் கபடி போட்டி 14ம் தேதி வீரர்கள் தேர்வு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
01:05

கடலுார்:தமிழ்நாடு ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட வீரர்கள் தேர்வு 14ம் தேதி நடக்கிறது.


தமிழ்நாடு ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை திருவாரூரில் நடக்கிறது. இதில், பங்கேற்பதற்கான கடலுார் மாவட்ட ஜூனியர் ஆண்கள், பெண்கள் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் வரும் 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.தேர்வில் பங்கேற்கும் ஆண்கள் 70 கிலோ பிரிவிற்குள்ளும், பெண்கள் 65 கிலோ எடை பிரி

விற்குள்ளும் இருக்க வேண்டும்.


வயது 20க்குள் இருக்க வேண்டும். அதாவது 1998ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் போது, ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.

இத்தகவலை மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X