வானூரில் வெடிகுண்டு பதுக்கிய வழக்கு முக்கிய குற்றவாளி கடலூரில் சரண்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
01:10

கடலுார்:வானுார் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து, பெண் படுகாயமடைந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கடலுார் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.



விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த கடப்பேரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 35; இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு, காரணப்பட்டு கிராமத்ததில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 24ம் தேதி தனது குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு வந்தார்.


மறுநாள் 25ம் தேதி அறிவழகன் மனைவி மீனாட்சி, 20; கூரை வீட்டை சுத்தம் செய்தபோது, தவிடு இருந்த பக்கெட்டை வெளியே கொட்டியபோது, அதில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில், படுகாயமடைந்தார்.


இதுகுறித்து வானுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் கோஷ்டியைச் சேர்ந்த டான் (எ) திருநாவுக்கரசு, 27; பல கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட இவர் தற்காப்பிற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து, தனது நண்பர்கள் உதவியுடன், கடப்பேரிக்குப்பத்தில் பூட்டிக் கிடந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.


அதனைத் தொடர்ந்து வெடிகுண்டை பதுக்கி வைத்த கார்த்தி, குமரேசன், ராகுல் மற்றும் வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வழக்கின் முக்கிய நபரான வெடிகுண்டு தயாரித்த திருநாவுக்கரசை தேடி வந்தனர்.இந்நிலையில் திருநாவுக்கரசு நேற்று மதியம், கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் சரணடைந்தார். அவரை விசாரித்த மாஜிஸ்திரேட் அன்வர் சதாக், திருநாவுக்கரசை சிறையில் அடைக்கவும், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டார். அதன்பேரில் திருநாவுக்கரசு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X