| இறகு பந்து போட்டி பரிசளிப்பு Dinamalar
இறகு பந்து போட்டி பரிசளிப்பு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
01:28

சிதம்பரம்:சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அருண்பிரசாத் நினைவு இறகுப் பந்துக் கழகம் சார்பில் கடலுார் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி வயலுார் காமராஜ் மெட்ரிக் சிறப்பு பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.


போட்டியை அருண்பிரசாத் நினைவு அறக்கட்டளை தலைவர் லட்சுமிகாந்தன் துவக்கி வைத்தார். போட்டியில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 66 பேர் பங்கேற்றனர்.மாணவிகளுக்கானப் போட்டியில் முதல் இடம் பிடித்த கடலுார் ஜெயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாயும்; 2ம் இடம் பெற்ற வடலுார் வள்ளலாளர் குருகுலம் மேல்நிலைப் பள்ளிக்கு 7,000 ரூபாயும் பரிசு வழங்கப்பட்டது.


மாணவர்கள் பிரிவில் முதல் இடம் பெற்ற சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசும், 2ம் இடம் பெற்ற கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 7,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய மூன்று அணிகளுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் ஊக்கப் பரிசாக தலா 500 ரூபாய் வழங்கப்பட்டது.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X