| டென்னிஸ் போட்டி ஜோசிகா ஜே ஜே! Dinamalar
டென்னிஸ் போட்டி ஜோசிகா ஜே ஜே!
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
23:40

கோவை, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி, 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஜோசிகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

கோவை, காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான, 'புள்ளிகள் தரவரிசை பட்டியல்' தேசிய

அளவிலான போட்டிகள், லிவோ ஸ்போர்ட்ஸ் டென்னிஸ் கோர்ட்டில் நடந்தன. இதில்,

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா,

கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், அர்மான் அகமது, ரக் ஷக் தருண் ஆகியோர் மோதினர். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, அர்மான் அகமது, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ரக் ஷக் தருணை வென்றார்.

மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், ஜோசிகா, கனிஷ்கா ஆகியோர் மோதினர். ஆட்டம் துவங்கிய முதலே இரு வீராங்கனைகளும் சீரான இடைவெளியில், புள்ளிகள் பெற்று வந்தனர். முழுத்திறமையும் வெளிப்படுத்திய ஜோசிகா, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில், கனிஷ்காவை வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X