புதர்மண்டியுள்ள ரயில் நிலையத்தில்..பயமுறுத்துது, உஸ்... சத்தம்!  .  அச்சத்தில் நடுநடுங்கும் பயணிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
23:43

பெ.நா.பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ரயில்நிலையம் புதர்மண்டிக் கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம்

அதிகரித்துள்ளது; பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை - மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில், 2010 முதல் தினமும் நான்கு முறை பெரியநாயக்கன்பாளையம் ரயில்நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கிறது. இங்கிருந்த பழமையான ரயில் நிலையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு, தனியார் நிறுவன நிதியுதவியோடு, பெரும் பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்டது. பயணிகள் அமரும் இருக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.

போதுமான பராமரிப்பு இல்லாததால், இந்த ரயில் நிலையம் முட்புதரால் சூழ்ந்து கிடக்கிறது. இங்குள்ள பிளாட்பாரத்தில் பார்த்தீனிய செடிகள் வளர்ந்துள்ளன.

பயணிகள் உட்காரும் சிமென்ட் பெஞ்சுகளை சுற்றிலும் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. பிளாட்பாரம் அருகே பயணிகள் ரயில் ஏறும் இடத்தில் நெருஞ்சி முட்செடிகள் முளைத்துள்ளன. இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. இப்பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்

காமல் உள்ளது.

ரயில் பயணிகள் கூறுகையில், 'பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்துக்கு தண்ணீர் இணைப்பு கிடைக்கவில்லை என

காரணம் காட்டி, பல மாதங்கள் கழிப்பிடங்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. பின், இணைப்பு தரப்பட்டது. தற்போது போதிய அளவு தண்ணீர் இருந்தும், மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஏற்றுவதில்லை. இதனால், கழிப்பிடங்களை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வசதி அறவே இல்லை. ரயில் நிலையத்தை பாரமரிக்க தொகை ஒதுக்கினாலும், முறையாக பயன்படுத்துவதில்லை. சேலம் கோட்ட மேலாளருக்கும், அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளோம்' என்றனர்.

சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், ''ரயில் நிலையத்தில், ஒப்பந்ததாரர் மூலமாக பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

அதில் கிடைக்கும் தொகையை கொண்டு, ரயில் நிலையத்தை பராமரிப்பதில் சிரமம் உள்ளது.

ரயில்வே நிர்வாகத்தை மட்டுமே எதிர்பார்க்காமல், பாசஞ்சர் ரயிலை தினமும் பயன்படுத்தும் மாணவ, மாணவியர்

உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, ரயில் நிலையத்தை சுத்தப்

படுத்தி, தொடர்ந்து பராமரிக்க முன்வர வேண்டும்,'' என்றார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
18-ஜூலை-201812:53:25 IST Report Abuse
Kundalakesi நம்ம கோவை மக்கள் தான் ஒன்று சேர்ந்து வார இறுதி நாளில் இதை செய்து காட்ட வேண்டும். உபயோகிக்கும் மக்களுக்கும் பொறுப்பு உண்டு. வாருங்கள் நடத்தி காட்டுவோம். ஒரு கை தூக்கினால் பல கை தூக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X