போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2018
01:32

மார்க்கெட்டில் திருடிய பெண் கைது


தி.நகர், பர்கிட் சாலையில், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் கடைக்கு வந்த ஒரு பெண், விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை, ஆடைக்குள் மறைத்து வைத்து திருட முயன்றார். இதைப் பார்த்த ஊழியர், அந்த பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.மாம்பலம் போலீசார் விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த அமுதா, 49, என்பது தெரியவந்தது. போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கஞ்சா விற்ற நான்கு பேர் கைது


கோட்டை, அன்னை சத்யா நகரில் நேற்று, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நான்கு பேரை, பிடித்து விசாரித்தனர். அதில், மந்தைவெளியைச் சேர்ந்த நால்வர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 300 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.



30 சவரன் பறிமுதல்


ஆவடி பேருந்து நிலையத்தில், நேற்று மாலை, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து, தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த காமராஜன், 42, சீனிவாசன், 26, என்பதும், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.



ஆட்டோ திருடியோர் கைது


எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர், சிவகுமார், 28; ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஷேர் ஆட்டோ, 10ம் தேதி காலை, திருடு போனது. இது குறித்து, எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 36, ஆனந்தராஜ், 41, ஆகியோர், ஆட்டோவை திருடியது தெரியவந்தது. இருவரையும், நேற்று கைது செய்த போலீசார், மூன்று ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.



செயின் பறித்தவர் கைது


ஆலந்துாரைச் சேர்ந்தவர், ஜெயந்தி, 40. இவர், நேற்று காலை, வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது வந்த மர்மநபர், ஜெயந்தியின் செயினை பறித்து, தப்ப முயன்றார். பொதுமக்கள், அந்த நபரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருக்கோவிலுாரைச் சேர்ந்த பழனி, 40, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.



பைக் திருடிய இரண்டு பேர் கைது


மாதவரம் போலீசார், ரவுண்டானா மேம்பாலம் அருகே, இரவு, 8:30 மணிக்கு, வாகன சோதனையில், ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அய்யனார், 23, ஸ்ரீதர், 26, என்பதும், வாகனத்தை திருடி

வந்ததும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.



பணம் பறித்த 5 திருநங்கையர் கைது


மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், சபீர், 52. இவர், நேற்று முன்தினம், ஊருக்கு செல்வதற்காக, சென்ட்ரலில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் அமர்ந்திருந்தார்.

அங்கு வந்த, ஐந்து திருநங்கையர், சபீரிடம் இருந்து, 7,000 ரூபாய், வெள்ளி மோதிரம், கைகடிகாரம் உள்ளிட்டவற்றை பறித்து, தப்பினர். இதுகுறித்து சபீர், சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், ரயில்வே போலீசார் நேற்று, ஐந்து திருநங்கையரையும் கைது செய்து, அவர்கள் வழிப்பறி செய்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.



பணம் பறித்த நால்வர் கைது


பெரம்பூர் நெடுஞ்சாலை, சந்திரா யோகி சமாதி தெரு சந்திப்பில், கிரிராஜன், 53, என்பவர், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, அவரது கடைக்கு வந்த நால்வர், கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்தனர். கிரிராஜன் சத்தமிட்டதை அடுத்து, அக்கம்பக்கத்து கடைக்காரர்கள், நால்வரையும் விரட்டி பிடித்து, பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், ஓட்டேரியைச் சேர்ந்த தினகரன், 20, உள்ளிட்டோர் என தெரியவந்தது.நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.



மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது


ஐஸ்ஹவுஸ் காவல் எல்லைக்கு உட்பட்ட பெசன்ட் சாலையில், நேற்று காலை, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இனயத்துல்லா, 45, என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 7 மதுபாட்டில்கள், 4,700 பணத்தை பறிமுதல் செய்தனர்.




தனியார் ஊழியரிடம் மொபைல் பறிப்பு


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுடலை, 27; தனியார் நிறுவன ஊழியர். அவர், நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். பட்டினப்பாக்கம் போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.



வழிப்பறி செய்த நால்வர் கைது


அமைந்தகரை காவல் எல்லைக்கு உட்பட்ட சித்தா கல்லுாரி அருகே, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரிடம் விசாரித்ததில், நெற்குன்றத்தைச் சேர்ந்த, முகமது ஆதம், 19, உள்ளிட்டோர் என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, நான்கு பேரையும், நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 17 மொபைல் போன்கள், 2 கத்திகள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X