லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
08:48

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தவர்களை பிணைக் கைதியாகப்பிடித்து வைத்தான்.



காரில் வேகமாக வந்து கடையின் முகப்பை உடைத்து நொறுக்கிய அவன், தன்னை துரத்திய பாதுகாவலர்களையும் போலீசாரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதனால் கடையில் ஷாப்பிங் செய்தவர்கள் அலறியடித்து ஓடினர்.சிலர் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோடினர். பிணைக்கைதியாக சிலரைப் பிடித்து வைத்த அவன் ஒரு பெண்ணை சுட்டதில் அவர் காயம் அடைந்தார்.



காயம் அடைந்தவரை போலீசார் கடைக்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மர்மநபர் சரமாரியாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக அந்த மர்ம நபர் குடும்பத் தகராறில் தனது பாட்டியையும் காதலியையும் சுட்டுவிட்டு காரில் வேகமாக வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
22-ஜூலை-201811:52:47 IST Report Abuse
Ram அமெரிக்கா செல்வது தான் எனது இலட்சியம் என்று பத்து விரலை காட்டும் எனது சொந்தங்கள் இதை பார்த்தாவது திருந்துவார்களா?
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
22-ஜூலை-201817:40:58 IST Report Abuse
sankarஒரு கொன்சிலரை எதிர்த்து பேசினாலே அடிப்பார்களோ என பயந்து தமிழ்நாட்டில் வாழ்வதை விட அமெரிக்கா செல்வது மேல்...
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai ,இந்தியா
22-ஜூலை-201811:42:45 IST Report Abuse
Tamilan . அது 30 கோடி மக்கள் உள்ள நாடு . ஒரு சம்பவம் அப்படி இப்படி நடக்கும்தான் , இங்கே நடப்பது போல்.
Rate this:
Share this comment
Cancel
LodakkuPaandi - எல்லாந்தமிழ்நாடுதேன் வேறென்ன,இந்தியா
22-ஜூலை-201811:07:48 IST Report Abuse
LodakkuPaandi தமிழ் நாடும் இதே மாதிரி ஒரு நா அமெரிக்கா ஆயிரும். எல்லாரும் வேல வெட்டி இல்லாம துப்பாக்கியை தூக்கிட்டு மென்டலா திரியலாம்.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
22-ஜூலை-201816:24:43 IST Report Abuse
s.rajagopalanமென்டலாவா ...மெர்ஸெலாவா ....?...
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
22-ஜூலை-201816:28:04 IST Report Abuse
s.rajagopalanபள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் வீடு திருப்புவார்களா என்று சொல்ல முடியாது...கடைக்கு போனாலும் அதே கதிதான்...இரண்டு மாதத்திற்கொரு முறை இப்படி நடக்கிறது.. ஆனால் இவன் 'இந்தியாவில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று ரீல் விடுகிறான் " நேரம்டா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X