| போலீஸ் செய்திகள் Dinamalar
போலீஸ் செய்திகள்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
01:07

106 பவுன் நகைகள் கொள்ளை


திருப்பரங்குன்றம்: பாலாஜிநகர் டாக்டர் வேலுச்சாமி. இவரது வீட்டில் 8 மாதங்களுக்கு முன் கண்காணிப்பு கேமரா பராமரிப்பு பணி நடந்தது. அப்போது 106 பவுன் நகைகள் கொள்ளை போனதாகவும், பராமரிப்பு பணிக்கு வந்த ரவி, ரமேஷ் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அப்போது திருநகர் போலீசில் புகார் செய்தார். போதிய ஆதாரமின்றி வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்கியதை தொடர்ந்து, துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். இதன்அடிப்படையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



வீட்டில் தீ விபத்து


திருமங்கலம்: தெற்கு தெரு சென்ட்ரிங் ஒப்பந்தக்காரர் ரகுபதி. நேற்று வீட்டில் மின்கசிவால் தீப்பிடித்தது. தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். பெரும்பாலான பொருட்கள் தீயில் கருகின.



குவாரியில் மூழ்கி சகோதரர்கள் பலி


மேலுார்: வெள்ளநாதன்பட்டி சக்கரை மகன்கள் கார் டிரைவர் சதாம்உசேன்,22, சலீம்,20. இவர்களும், சந்தைப்பேட்டை ராஜாமுகமது மகனான 10ம் வகுப்பு மாணவர் இஸ்ரத்அகமதுவும்,15, கீழையூரில் தனியார் கிரானைட் குவாரியில் நீச்சல் பழக சென்றனர். நீச்சல் தெரியாமல் சதாம்உசேன் மூழ்கவே, சலீம் காப்பாற்ற முயன்றபோது இருவரும் நீரில் மூழ்கிஇறந்தனர்.



வேன் மோதி தொழிலாளி பலி


அலங்காநல்லுார்: பாசிங்காபுரம் வீரணன்,70, கூலி தொழிலாளி. பணி முடிந்து சைக்கிளில் சிக்கந்தர்சாவடி வழியாக வீட்டிற்கு சென்றார். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.



மணல் லாரி பறிமுதல்


காடுபட்டி: எஸ்.ஐ., மாயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சித்தாதிபுரம் வைகை ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது லாரியில் மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓடியது. லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய விளாம்பட்டி பார்த்திபன், பாண்டி, நல்லதம்பி ஆகியோரை தேடி வருகின்றனர்.


 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X