போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
02:14

கேலி செய்தவர்கள் மீது வழக்கு

ராமநாதபுரம்: பிச்சாவலசையை சேர்ந்தவர் நவீத், இவர் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் பஸ்சில் செல்லும் போது, அதே பள்ளியில் படிக்கும் மாணவிகளை தெற்குதரவை காலனியை சேர்ந்தவர்கள் கேலி செய்துள்ளனர். நவீத் தட்டிக்கேட்டுள்ளார். அவரை தாக்கினர். நவீத் புகாரில் கேணிக்கரை போலீசார் தெற்குதரவை காலனியை சேர்ந்த சக்திபிரகாஷ் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சங்கிலி பறிப்பு: இருவர் கைது

ராமநாதபுரம்: பிருந்தாவன் கார்டன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி கவிதா, இவர் கிழக்குகடற்கரைசாலை காய்கறி கடைக்கு சென்ற போது இவரது கழுத்தில் இருந்து 3 பவுன் சங்கிலியை, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றனர். இதே போல் வெளிப்பட்டினம் தானுமாலயசுவாமி கோயில் தெருவை சேர்ந்த உதயசூரியன் மனைவி கஸ்துாரி

ரோட்டில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இந்த இரு வழக்குகளையும் பதிவு செய்த கேணிக்கரை போலீசார் பெருங்குளத்தை சேர்ந்த மதன்குமார்,21, சடையன்வலசையை சேர்ந்த தமிழ்செல்வன்,21, ஆகிய இருவரையும் கைது செய்து, ஏழு பவுன் நகைகளை மீட்டனர்.

பொறியாளர் வீட்டில் நகை திருட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழுதுார் பிளாண்டில் பொறியாளராக வேலை பார்ப்பவர் புருசோத்தமன்,56, இவர் பட்டினம்காத்தான், மகாத்மா காந்தி நகரில் வசித்து வந்தார். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திருடர்கள் கதவை உடைத்து 6 பவுன் நகை, 2.50 கிலோ வெள்ளி பொருட்கள், எல்.இ.டி., டிவி, 3 வாட்சுகள் உட்பட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

திருவாடானை: தொண்டி அருகே தெற்குஊரணங்குடியை சேர்ந்தவர் இருளாண்டி, 60. கடந்த 19ந் தேதி டூவீலரில் ெஹல்மெட் அணியாமல் தொண்டிக்கு சென்றார்.காலை 10:00 மணிக்கு புதுபட்டினம் அருகே மாடு குறுக்கே சென்றதால் தவறி கீழே விழுந்தார். தலையில் காயமடைந்த இருளாண்டிமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுநேற்று இறந்தார்.

 

மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X