| சிறுமி பலாத்காரம் : ஐந்து பேர் கைது Dinamalar
சிறுமி பலாத்காரம் : ஐந்து பேர் கைது
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
02:37

புதுச்சேரி: புதுச்சேரியில், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்

செய்த காதலன் உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, வழுதாவூரைச் சேர்ந்த விக்கி, 20, என்பவன் காதலித்தான். விக்கி, அச்சிறுமியை அருகில் உள்ள தோப்பிற்கு அழைத்து சென்று, ஆசை வார்த்தை கூறி,

பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அதை, மொபைலில் வீடியோ எடுத்து, சிறுமியிடம் காட்டி மிரட்டி, நண்பர்கள், ஏழு பேருடன் சேர்ந்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தான். இது குறித்து, குழந்தைகள் நலக்குழு அளித்த புகாரின் படி, சிறுமியின் காதலன் விக்கி, 20,

நண்பர்கள் ஏழு பேர் மீது, திருக்கனுார்

போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், விக்கி, ௧௭ வயது சிறுவர்கள் இருவர் உட்பட, ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும்

சிறுமியை, ஒரு மாதத்திற்கும் மேலாக, பல இடங்களுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும், கைதான அனைவரும், இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.

கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று காலை, 11:30 மணியளவில்,

போலீஸ் ஸ்டேஷன் எதிரே திரண்டதால்

பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X