கிரைம் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
23:43

சூதாடிய ஏழு பேர் கைது

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் ரயில்வே கேட் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய மேல்நாரியப்பனுாரைச் சேர்ந்த நல்லதம்பி,33; அங்கமுத்து,27; செல்வராஜ்,42; சபரி,30; உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

இதேபோல், கள்ளக்குறிச்சி அடுத்த பானையங்கால் கிராமத்தில், வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய அதே ஊரைச் சேர்ந்த செல்வராசு,37; ஆறுமுகம்,29; அய்யப்பன்,33; ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.



வாலிபரை தாக்கிய மூவர் கைது

கள்ளக்குறிச்சி அடுத்த மரவாநத்தம் மேற்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் மகன் வெங்கடேசன்,32; இவர், கடந்த 21ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்றார். மாலை 4:15 மணியளவில் மரவாநத்தம் சுடுகாட்டில், வெங்கடேசனுடன் சென்ற சிவாஜி என்பவரை, கள்ளக்குறிச்சி ரோடுமாமந்துார் பாலு, சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா,32; ராமச்சந்திரன்,34; பந்தலராஜன்,27; ஆகியோர் தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற வெங்கடேசனையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து இளையராஜா, ராமச்சந்திரன், பந்தலராஜன் ஆகியோரை கைது செய்தனர்.



முன்விரோத தகராறு: ஒருவர் கைது

ரிஷிவந்தியம் அடுத்த லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த பாவாடை மனைவி சாந்தா,38; இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் ராமன் என்பவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி சாந்தா வீட்டு வாசலின் முன் சமைத்து கொண்டிருக்கும் போது, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமன் மகன் முருகன், சாந்தாவை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சாந்தா, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், ராமன் மற்றும் அவரது மகன்கள் முருகன்,31; ஏழுமலை ஆகிய மூன்று பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து, அதில் முருகனை கைது செய்தனர்.



மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலுார் அடுத்த கீழக்கொண்டூர் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில், அரகண்டநல்லுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது‚ அரசு அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற ஐந்து மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜி‚ 25; அண்ணாமலை மகன் முருகன்‚ 40; வீராசாமி மகன் அன்பு‚ 35‚ ராமசாமி மகன் சிவா‚ 22; வேணுகோபால் மகன் பிரபு‚ 30; ஆகிய ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.



பெண் மாயம்

வளவனுார் அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி பாக்கியலட்சுமி,62; கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், மீண்டும் திரும்பவில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

 

மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X