போலீஸ் டைரி..
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2018
23:51

கத்தி முனையில் டாக்டரிடம் நகை பறிப்பு

அம்பத்துார் பாரதி நகர், ரெட்ஹில்ஸ் சாலையைச் சேர்ந்தவர், ஜெயகுமார் நேரு. அவரது மனைவி ரூபி, 70. மருத்துவர்களான இருவரும், வீட்டின் முன்புறம், கிளினிக் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க நபர், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ரூபியிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போது, தனியாக இருந்த ரூபியிடம், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த,

13 சவரன் செயினை பறித்து தப்பினான்.

அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.




வியாபாரிக்கு கொலை மிரட்டல்

வெட்டுவாங்கேணி, கஸ்துாரிபாய் நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர், மகேஷ் கிருஷ்ணன், 32. அவர், மயிலாப்பூரில் உள்ள கடைகளுக்கு, குடிநீர் கேன் விற்பனை செய்து வருகிறார். இவர், கார்த்திக் என்பவரிடம், ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார்.

இந்நிலையில், 22ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, ஐந்து பேருடன் வந்த கார்த்திக், மகேஷை தாக்கியதுடன், 'பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும்' என, கொலை மிரட்டல் விடுத்து

சென்றுள்ளார்.

இது குறித்து மகேஷ், நேற்று முன்தினம், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார்,

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இளம்பெண்ணிடம் மொபைல்போன் பறிப்பு

கொளத்துார், சாந்தி நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர், ரேஷ்மா, 16. அவர், நேற்று முன்தினம் இரவு, தன் தந்தையுடன், இருசக்கர வாகனத்தில், அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

ஆயிரம்விளக்கு, பத்தாரி சாலை சந்திப்பு அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ரேஷ்மா கையிலிருந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.




மனைவியை அடித்த கணவன் கைது

ஓட்டேரி, பிரிக்ளின் சாலையைச் சேர்ந்தவர், முபீனா பானு, 25. அவரது கணவர், சந்தோஷ், 26. அவர்களுக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று காலையும், தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்தோஷ், அவரது மனைவியை அடித்து உதைத்தார். இது குறித்து, முபீனா பானு, ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார், சந்தோஷை கைது செய்தனர்.




போலீஸ்காரர் மீது தாக்குதல்

சேலையூர், போக்குவரத்து காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ராஜேந்திரன், 50. இவர், நேற்று முன்தினம் மதியம், கிழக்கு தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி, சோதனை செய்ய முயன்றார்.

ஆனால், ஓட்டுனரான, மேற்கு தாம்பரம், கடப்பேரியைச் சேர்ந்த, பாலமுருகன், 34, லாரியை நிறுத்தாமல் செல்ல முயன்றார். இதையடுத்து ராஜேந்திரன், லாரி ஓட்டுனரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பாலமுருகன், எஸ்.ஐ., ராஜேந்திரனை தாக்கி உள்ளார்.

ராஜேந்திரன் அளித்த புகாரின்படி, சேலையூர் போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X