போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
23:32

ஆட்டோவில் சென்றவரின் பை பறிப்பு

அண்ணாநகரைச் சேர்ந்தவர், தேவ்தாஸ், 48; துணிக்கடை உரிமையாளர். அவர், நேற்று முன்தினம் இரவு, 10:45 மணியளவில், அண்ணாசாலையில் உள்ள காஸ்மோ பாலிடன் கிளப்பிலிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, அபுபேலஸ் ஓட்டல் அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தேவ்தாஸின் பையை பறித்து தப்பினர். அதில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை வைத்துள்ளார். கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசாக நடித்த காவலாளி கைது

வில்லிவாக்கம், ஈஸ்வரன் கோவில் பகுதியில், ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு, நேற்று முன்தினம் இரவு, போலீஸ் சீருடையில் வந்த ஒருவர், கடைக்காரர்களிடம் மாமூல் வசூலித்துள்ளார். இதையறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், மாமூல் வசூலித்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், ராஜமங்கலத்தைச் சேர்ந்த, ராஜு, 48, என்பதும், தி.நகரில் உள்ள தனியார் நிறுவன காவலாளி என்பதும் தெரியவந்தது. போலீசார், அவரை நேற்று காலை கைது செய்தனர்.

ஆதம்பாக்கத்தில் பைக் திருடர்கள் கைது

ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார், கக்கன் பாலம் அருகே, நேற்று அதிகாலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரை விசாரித்தனர். இதில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அஜய், 23, உள்ளிட்ட நால்வர் என்பதும், வழிப்பறி, வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், நான்கு இருசக்கர வாகனங்கள், ஐந்து மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வாலிபரிடம் மொபைல் போன் பறிப்பு

கோவை மாட்டத்தைச் சேர்ந்தவர், குமார், 45; சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று காலை, ஆயிரம்விளக்கு பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டியிடம் 6 சவரன் பறிப்பு

மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர், ராஜலட்சுமி, 55. அவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவரது, 6 சவரன் செயினை பறித்து தப்பினர். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

அடையாறு, இந்திராநகரைச் சேர்ந்தவர், வெங்கடேஷ் மனைவி சண்முகவடிவு, 43. இவரது மகளை, அடையாறில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் சேர்ப்பதாக கூறி, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 45, என்பவர், இரண்டு

லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.

பள்ளியில் இடம் வாங்கி தராமலும், பணத்தை கொடுக்காமலும் மணிகண்டன் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம், பணத்தை திருப்பி கேட்ட சண்முகவடிவை கொலை செய்துவிடுவதாக, மணிகண்டன் மிரட்டி உள்ளார். இதையடுத்து நேற்று, கோட்டூர்

புரம் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

பணம் பறித்த இரண்டு பேர் கைது

பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர், முகமது சைபான், 18; தனியார் கல்லுாரியில், பி.டெக்., முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், நண்பர் தயான் என்பவருடன், பழைய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த இம்ரான், 21, என்பரை, நேற்று முன்தினம் மாலை அணுகியுள்ளனர். அப்போது, இம்ரான், அவரது நண்பர்கள், முகமது சைபான், தயானை மிரட்டி பணம் பறித்து தப்பினர். இம்ரான் உட்பட இருவரை கைது செய்த போலீசார், மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

லாட்டரி விற்றவர் கைது

அண்ணா சாலை, காவல் எல்லைக்கு உட்பட்ட பாரதி சாலையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், கானத்துாரைச் சேர்ந்த பாஸ்கர், 44, என்பதும், ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. நேற்று காலை, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

சில்மிஷத்தில் ஈடுபட்டவன் கைது

அயனாவரத்தைச் சேர்ந்த, 24 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு, அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அயனாவரம், வசந்தா கார்டன், 1வது தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 33, என்பவர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பிட்டிருந்தார்.

பிரகாஷை பிடித்து போலீசார் விசாரித்ததில், தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை, பிரகாஷ் கைது செய்யப்பட்டான்.

டாக்டரிடம் செயின் பறித்தவன் கைது

அம்பத்துாரைச் சேர்ந்தவர், ரூபி, 71; டாக்டர். அவர், தன் வீட்டில் கிளீனிக் நடத்தி வருகிறார். 24ம் தேதி இரவு, 8:30 மணியளவில், வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த ஒருவன், ரூபியின், 10 சவரன் செயினை பறித்து, இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பினான்.

இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், அம்பத்துார், பழைய டவுன்சிப் சாலையைச் சேர்ந்த சீனிவாசன், 43, என்பவன், செயின் பறித்தது தெரிந்தது. நேற்று காலை, 10:00 மணியளவில், பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே இருந்த அவனை கைது செய்த அம்பத்துார் போலீசார், அவனிடமிருந்து, 10 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

பூட்டை உடைத்து கொள்ளை

குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர், செந்தில் முருகன், 30; தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா, 25. செந்தில்முருகன், வெளியூர் சென்றுள்ள நிலையில், நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு, அமுதா தொழிற்சாலைக்கு சென்றார். மாலை, 6:00 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில், பீரோ உடைக்கப்பட்டு, 5 சவரன் நகைகள், 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

சிட்லபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X