சசி குடும்பத்தில் ஆளுக்கொரு கட்சி : பாஸ்கரனும் களத்தில் குதிக்கிறார்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
23:50

தஞ்சாவூர்: புதிய கட்சி பெயர், கொடியை சில நாட்களில் அறிவிக்கப் போவதாக, தினகரனின் தம்பி பாஸ்கரன் தெரிவித்துஉள்ளார்.ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வை மீட்கும் வரை, புதிய கட்சி நடத்துவதாக அறிவித்து, அ.ம.மு.க., என்ற கட்சியை தினகரன் துவங்கினார்.


அரசியல் ஆசை : அவருக்கு போட்டியாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளை நியமித்து வருவதாக, 'காமெடி' செய்து வருகிறார்.'இவர்களுக்கு நான் சளைத்தவனா' எனக் கேட்கும் வகையில், புதிய கட்சி அறிவிப்பை வெளியிட தயாராகி வருகிறார், தினகரனின் தம்பி பாஸ்கரன்.ஜெயலலிதா ஓரங்கட்டிய பின், ஆந்திராவில் குவாரி தொழிலில், பிசியானார் பாஸ்கரன். ஜெயலலிதா மரணத்திற்குப் பின், அவரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலருக்கும், அரசியல் ஆசை வந்தது போலவே, இவருக்கும் வந்துள்ளது.எம்.ஜி.ஆரின், 101வது பிறந்த நாளையொட்டி, நேற்று முன்தினம், தஞ்சையில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை

பாஸ்கரன் வழங்கினார். இவரை வரவேற்க, சிவப்பு, பச்சை, கறுப்பு நிறத்தில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த கொடி, எம்.ஜி.ஆருடன் பாஸ்கரன் இருப்பது போல, பிளக்ஸ் பேனர்கள், ஊர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன.


லட்சியம் : அப்போது, நிருபர்களிடம், பாஸ்கரன் கூறியதாவது:எம்.ஜி.ஆரைப் போல, துாய்மையான அரசியல் செய்ய வேண்டும் என்பது தான், என் லட்சியம்.அதன்படி, என் புதிய

அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை, இன்னும் சில நாட்களில் அறிவிக்க

உள்ளேன். ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக, எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு வந்தார்.

அவருடைய வழியில், என் அரசியல் பயணம் இருக்கும். மற்றவர்களை போல், நான் அரசியலுக்கு வரவில்லை.தமிழகத்தில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. அதை மோடி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்; நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


பாஸ்கரனின் அரசியல் பிரவேசத்துக்கு பின், திவாகரன் இருப்பதாக கூறப்படுகிறது. உடன் பிறந்த தம்பியே எதிர் அரசியல் செய்தால், அது, தினகரனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், பாஸ்கரனை, திவாகரன் துாண்டி விடுவதாக கூறப்படுகிறது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஜூலை-201808:07:20 IST Report Abuse
Bhaskaran கொள்ளையடித்து வைத்திருக்கும் பணம் கொஞ்சம் துருப்பிடிக்காமல் வெளியே வருவதில் மகிழ்ச்சியே கொஞ்சம் பிரியாணிக்கடைகள் டாஸ்மாக் கடைகளுக்கு வியாபாரம் ஆகட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X