காங்., நிர்வாகி வெட்டி கொலை பட்டப்பகலில் பயங்கரம்; போலீஸ் குவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2018
00:00

புதுச்சேரி: புதுச்சேரி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், டூ - வீலரில் சென்ற காங்கிரஸ் நிர்வாகியை, பட்டப் பகலில், மர்ம நபர்கள், வெட்டி கொலை செய்தனர்.

பதற்றம் நிலவுவதால், அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, காலாப்பட்டைச் சேர்ந்தவர் ஜோசப், 42; புதுச்சேரி காங்., வடக்கு மாவட்ட தலைவரான இவர், காலாப்பட்டில் உள்ள தொழிற்சாலைகளில், லேபர் கான்ட்ராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வந்தார்.


எதிர்ப்பு : புதுச்சேரி வருவாய் துறை அமைச்சர், ஷாஜகானுக்கு நெருக்கமானவர். காலாப்பட்டில் உள்ள, தனியார் மருந்து கம்பெனி விரிவாக்கத்திற்கு, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கம்பெனிக்கு ஆதரவாக ஜோசப் செயல்பட்டார். இதனால், இரு தரப்பிற்கும் இடையே, கடந்த சில மாதத்திற்கு முன் மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இச்சம்பவத்திற்கு பிறகு, ஜோசப் தரப்பிற்கும், எதிர் தரப்பிற்கும் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மதியம், 12:45 மணிக்கு ஜோசப், காலாப்பட்டில் இருந்து, தன் ஸ்கூட்டரில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆரோவில் கடற்கரைக்கு செல்லும் பாதை அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில், பின் தொடர்ந்து வந்த, 'ஹெல்மெட்' அணிந்த இரண்டு வாலிபர்கள் வழி மறித்து, வீச்சரிவாளால் ஜோசப் கழுத்தில் சரமாரியாக வெட்டி, தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ஜோசப், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.தகவல் அறிந்து வந்த, கோட்டக்குப்பம் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோசப்பை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.


ஆதரவு : கோட்டக்குப்பம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தனியார் மருந்து கம்பெனி விரிவாக்கத்திற்கு, ஜோசப் ஆதரவு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்ட ஜோசப் உடல்,

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. மருத்துவமனைக்கு வந்த, முதல்வர் நாராயணசாமி, ஜோசப் உடலை பார்த்தார்.சட்டசபைக்கு வந்த ஜோசப் உறவினர்கள், முதல்வர் நாராயணசாமியை சந்தித்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.


காலாப்பட்டில் பதற்றம் : ஜோசப் கொலையால், காலாப்பட்டு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. துப்பாக்கி ஏந்திய ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சர்ச்சைக்குரிய மருந்து கம்பெனி எதிரிலும், ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஜோசப் கொலை தொடர்பாக, கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-ஜூலை-201808:59:56 IST Report Abuse
Srinivasan Kannaiya காலாப்பட்டில் உள்ள தொழிற்சாலைகளில், லேபர் கான்ட்ராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வந்தார்.... அதாவது ஊர் சுற்றி கொண்டு இருந்தவருக்கு கட்ச் கொடுத்த வேலை, லேபர் கான்ட்ராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X