| போலீஸ் செய்திகள்... Dinamalar
போலீஸ் செய்திகள்...
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
05:56

ஒலிபெருக்கி அமைப்பாளர் பலி

உசிலம்பட்டி: பேச்சியம்மன்கோயில்பட்டி ஜெயக்கொடி, 54. ஒலிபெருக்கி அமைப்பாளர். போதையில் வீட்டுக்குள் செல்லும் போது கதவு நிலைப்படியில் மோதி காயமுற்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மகன் சரவணன் புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டியிடம் நகைபறிப்பு

திருமங்கலம்: முகமதுஷாபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தெய்வேந்திரன் மனைவி வீரம்மாள், 60. இவர் நேற்று முன்தினம் இரவு பலசரக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு முகமதுஷாபுரம் ரைஸ்மில் தெருவில் சென்றார். டூவீலரில் பின்தொடர்ந்த இரு வாலிபர்கள், முகவரி கேட்பது போல் பேசி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலிச்செயினை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.

லேப்டாப் திருடன் கைது

மதுரை: சென்னை கார்த்திக்,27, மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே ஓட்டல் முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது லேப்டாப் திருடுபோனது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் திருடியது விருதுநகர் மாவட்டம் சங்குரெட்டியபட்டி ஆமத்துார் பால்பாண்டி,25, எனத்தெரிந்தது. அவரை திலகர்

திடல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் கைது

செய்தார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X