பீதி!பருவமழை காலம் துவங்குவதால்... கிடப்பில் ஆரணி ஆற்று பால பணி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
00:22

பொன்னேரி:ஆரணி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வந்த பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால்,

பருவமழைக் காலம் துவங்கவுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக, பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பொன்னேரி- -- குண்ணம்மஞ்சேரி இடையே, ஆரணி ஆற்றின் குறுக்கே, 12 கோடி ரூபாய் நிதியில், பாலம் அமைக்கும் பணிகள், 2016ம் ஆண்டு, ஜனவரியில் துவக்கப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலை மாதம் பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.

பாலப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்ததால், கெடுகாலம் முடிந்து, ஓராண்டு ஆகியும் முழுமையடையவில்லை.

நான்கு மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இரு புறமும், 300 மீட்டர் தொலைவிற்கு இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. ஏலியம்பேடு, குண்ணம்மஞ்சேரி, வைரன்குப்பம், பெருவாயல் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகளின், 30 ஆண்டு கால கோரிக்கையின் பயனாக துவங்கப் பட்ட இந்த பாலப் பணி, கைவிடப்படும் சூழல் நிலவுகிறது.

மேற்கண்ட கிராமங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, ஆரணி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோரும், இந்த

ஆற்றுப்பாலத்தை நம்பியே உள்ளனர்.

இந்நிலையில், அக்டோபர் மாதம் முதல், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. அந்த சமயத்தில், ஆற்றில் மழைநீர் தேங்கினால், பயணமும் தடைபட்டு, 5 கி.மீ., தொலைவு சுற்றி, செல்ல வேண்டும். அல்லது, ஆற்றில் ஆபத்தான படகு பயணத்தை தொடர வேண்டிய சூழலும் ஏற்படும்.

இதை எண்ணி கிராமவாசிகள் கவலை அடைந்துள்ளதுடன், அரசு அதிகாரிகள் மீதும் அதிருப்தியில் உள்ளனர்.

அவர்களின் அலட்சியத்தை கண்டித்து, கிடப்பில் போடப்பட்ட பால பணியை துவங்கக் கோரி, 13ம் தேதி, கிராம மக்கள் பலர், பொன்னேரியில் போராட்டம் நடத்தினர். இதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்த்தனர். ஆனால், பணியை துவக்கும் நடவடிக்கை, இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

பொன்னேரி - குண்ணம் மஞ்சேரி இடையேயான பாலப் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில், பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள்,

மிகவும் மெத்தனமாக இருக்கின்றனர்.

இப்போது துவக்கினால், பருவமழை தீவிரமடையும் காலத்திற்குள் பாலப்பணியை முடிக்கலாம். இதற்கு, மாவட்ட நிர்வாகம் தான் தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாலம் அமைந்தும் பயனில்லை

தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. வாகனங்கள் ஆற்றில் உள்ள பாதை வழியாக

செல்கின்றன. சேறும் சகதியுமாகி இருப்பதால், நடந்து செல்வோர் சேற்றில் சிக்கி வழுக்கி

விழுகின்றனர். பாலம் அமைந்தும், இணைப்பு சாலை இல்லாமல் பயனின்றி கிடப்பதுடன்,

அதற்காக செலவிட்ட நிதியும் வீணாகி வருகிறது. வாகனங்கள் பெரியகாவணம், சின்னகாவணம் வழியாக சுற்றிக்கொண்டு செல்கின்றன. அதிகாரிகளும் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி பெரிய

அளவிலான போராட்டத்தை மேற்கொள்வோம்.

எப்.முகமது ஷகில், பொன்னேரி

 

மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X