போலீஸ் டைரி..
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஆக
2018
00:06

திருடர்கள் இருவர் கைது

அண்ணாசாலை காவல் எல்லைக்குட்பட்ட, பார்டர் தோட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த், 21, லோகேஷ், 18, என்பதும், வீடுகளில் புகுந்து திருடி வந்ததும் தெரியவந்தது. நேற்று காலை, இருவரையும் கைது செய்த போலீசார், நான்கு மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.

மது விற்ற இருவர் கைது

ஓட்டேரி பகுதியில் மது விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமை செயலக காலனி குடியிருப்பு போலீசார், ஓட்டேரி, அப்பு செட்டி தெருவில், நேற்று காலை, 9:00 மணியளவில் கண்காணிப்பு பணியில்

ஈடுபட்டனர்.

அப்போது, மது விற்ற ரூபன், 30, கோதண்டம், 42, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிட

மிருந்து, 469 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொபைல் போன் கடையில் திருட்டு

கானத்துார் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்தவர், சதாம் உசேன், 27. அதே பகுதியில், மொபைல் போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 20 மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினி திருடப்பட்டது, தெரியவந்தது. கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

புரசைவாக்கம், பிரிக்ளின் சாலையில், தலைமை செயலக குடியிருப்பு போலீசார், நேற்று காலை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், ஓட்டேரியைச் சேர்ந்த சக்திவேல், 25, என்பது தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஓட்டேரியில் உள்ள சுடுகாட்டில், நேற்று முன்தினம் மாலை, கஞ்சா விற்ற, ஓட்டேரியைச் சேர்ந்த சீனிவாசன், 22, என்பவனை, தலைமை செயலக போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தகராறு செய்த 3 மாணவர்கள் கைது

வியாசர்பாடியில், டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில், நேற்று முன்தினம், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய போது, மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின், மூன்றாமாண்டு மாணவர்களான, ரஞ்சித்குமார், ஜானகிராமன், ஜீவா ஆகியோரை, மூவர் தாக்கி தப்பினர். காயமடைந்த மூவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எம்.கே.பி.நகர் போலீசார், இரண்டாமாண்டு மாணவர்களான, சாமுவேல், 19, உள்ளிட்ட மூவரை, நேற்று மதியம் கைது செய்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X