குமரியில் மீண்டும் கொட்டிய மழை: வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
02:11

நாகர்கோவில்;குமரியில் மீண்டும் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் மக்கள் அச்சம் அடைந்தனர். பேச்சிப்பாறை அணையில், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளதால், அணைக்கு வரும், 8,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

குமரி மாவட்டத்தில், சில நாட்களாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு தண்ணீர் வரும் நீர்ப் பிடிப்பு பகுதிகளான பாலமோர், சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.


இரு நாட்களுக்கு முன், பெருஞ்சாணி அணைக்கு உள்வரத்தாக வந்த, 30 ஆயிரம் கன அடிக்கு மேலான தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதே போன்று, பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட தண்ணீரால், குமரி மாவட்டத்தின் ஆற்றோரங்கள், அணை பகுதிகள் என, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்தன. பின், மழையின் வேகம் குறைந்ததால் வெள்ள அபாயம் நீங்கியது.

குழித்துறை தாமிரபரணி ஆற்றங் கரையோரம், தேங்காய்பட்டணம் வரை பல கிராமங்களில் மழை நின்ற போதும், வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வற்றவில்லை.


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து, மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், நீர்நிலைகள் ஓரமுள்ள பகுதிகளில் தண்ணீர் வற்றவில்லை.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று பாலமோரில் அதிகபட்சமாக, 3.1 செ.மீ., மழை பெய்தது.


மீண்டும் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சாணியில் இருந்து புத்தன் அணை செல்லும் கால்வாய் உடைப்பு, சாலைகள் மற்றும் மலையோர பகுதிகளில் சீரமைப்பு நடந்து வருகிறது. மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, பேரிடர் களை தவிர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.


மாவட்டம் முழுவதும் மழையால், 3,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட வாழை, 20 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள், ரப்பர் தோட்டம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து மழை நீடித்தால், குமரி மாவட்டம் மேலும் பாதிப்பிற்குள்ளாகும் சூழல் உள்ளது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X