ஜெயலலிதா அறிவித்த ஆறு வழிச்சாலை திட்டம்... நிறைவேறுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
23:41

மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த, பாடி -- திருநின்றவூர் ஆறு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த, அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி, அம்பத்துார், பாடியைக் கடந்து, சென்னைக்குள் வாகனங்கள் வருவது, சுலபமான காரியம் அல்ல. கட்டுக்கடங்காத வாகன நெரிசலில், நடந்து செல்வோர் கூட, திணறியபடிதான் செல்ல வேண்டும். மேலும் விபத்துகளால், உயிர் பலிகளும் அவ்வப்போது ஏற்படுகின்றன.



168 கோடி ஒதுக்கீடு :


சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை யில், பாடி முதல் திருப்பதி வரை, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டின் கீழ், 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில், திருத்தணியை அடுத்த தமிழக எல்லையான, அலமேலுமங்காபுரத்திலிருந்து, திருநின்றவூர் அடுத்த பாக்கம் வரை, முதற்கட்டமாக, 68 கி.மீ., வரை சாலை விரிவாக்க பணியை, தேசிய நெடுஞ்சாலை துறை

மேற்கொண்டது.



ஆனால், இரண்டாம் கட்டமாக, பாடி, அம்பத்துார், ஆவடி, திருநின்றவூர் வழியாக திருவள்ளூர் செல்லும், 22 கி.மீ., சாலை வரை, விரிவாக்கம் செய்வதற்கு, தேசிய நெடுஞ்சாலை துறை மறுத்து விட்டது.இதனால், 2013 ஏப்., 1ம் தேதி, சட்டசபையில், விதி, 110ன் கீழ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது: சென்னை - திருப்பதி சாலை, மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்படும். அதை, ஆறுவழிச் சாலையாக மாற்ற, 168 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.



ஆட்கள் இல்லை :


முதற்கட்டமாக, நான்குவழிச் சாலையாக மாற்ற, 98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அந்த சாலையை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்புக்கொள்ளவில்லை. பல முயற்சிகளுக்கு பின், 2014ல், அந்த சாலை, மாநில நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டது.



இதைத்தொடர்ந்து, 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு வழி சாலை அமைப்பதற்கான, முதல்கட்ட பணிகள் துவங்கின.ஆனால், சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்களை அகற்ற, அரசியல் குறுக்கீடு இருந்ததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, 2016 சட்டசபைத் தேர்தல், தமிழக முக்கிய தலைவர்களின் இறப்புகள், அரசியல் குழப்பம் ஆகிய வற்றால், தமிழக அரசு இயந்திரம் ஸ்தம்பித்தது. கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் குறித்து கேட்கவோ, செயல்படுத்தவோ ஆட்கள் இல்லை.



இந்நிலையில், கடந்த மார்ச்சில் அம்பத்துார், ஆவடி, திருவள்ளூர் ஆகிய மூன்று தாலுக்கா வட்டாட்சியர்கள் தலைமையில், சாலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணிகள் நடந்தன.



நெரிசல் அதிகரிப்பு :


அப்போது அதிகாரிகள் கூறுகையில், 'விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, சாலை விரிவாக்கம்

செய்யப்படும்' என்றனர். ஆனால் இதுவரை, முதற்கட்ட பணிகளே துவங்கப்படாமல் உள்ளன.

இதனால், மறைந்த முன்னாள் முதல்வர்,ஜெயலலிதா அறிவித்த திட்டம், செயல்பாட்டுக்கு வருவது கேள்வி குறியாகி உள்ளது. அதேசமயம், வாகன நெரிசலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதிகாரிகள் பணிகளை விரைவுபடுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காண வேண்டும் என்பதே, வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.



தனி வட்டாட்சியர் வேண்டும்!


நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. மூன்று வட்டாட்சியர்கள், இதற்காக நேரம்

செலவிட வேண்டும். அவர்கள், அன்றாட அலுவல் பணியில் மூழ்கி விடுகின்றனர். இதனால், இத்திட்டத்திற்காக தனிவட்டாட்சியர், சர்வேயர்களை நியமனம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம்.


- மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி



-- நமது நிருபர் --

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
22-ஆக-201815:47:45 IST Report Abuse
Suri இந்த திட்டத்தை நிறைவேற்ற தினமலர் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுகிறேன். திருநின்றவூர் வரை கடும் சாலை நெருக்கடி உள்ளது. திருநின்றவூரில் இருந்து பூந்தமல்லீ செல்லும் சாலை ரயில்வே கிராஸ்ஸிங் மேல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் திருப்பதி நெடுஞ்சாலை குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பலம் பாக்கம் செல்லும் சாலையில் இறங்குகிறது. திருநின்றவூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அந்த சாலையை திருவள்ளூர் வரையிலும் 6 வழி பாதையாக மாற்ற உடனடி நடவடிக்கை தேவை.நிலம் கையகப்படுத்த அளவீடு செய்த நிலையில் நிலா உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி உள்ளது. இதுவரையிலும் சாலை அமைக்கப்படும் என்று தெரியாததால் எந்த வித கட்டுமானமும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தினமலர் இந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X