| போலீஸ் டைரி Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஆக
2018
04:31

போதைப் பொருள் விற்ற இருவர் கைது

சென்னை நகரில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான மாவா, பான்மசாலா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை

விற்பனை செய்வதை, இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாஸ்திரிநகர், முதல் அவென்யூ, எல்லையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், போதைப் பொருட்கள் விற்பனை செய்த நாகராஜன், 50, முருகன், 45 ஆகிய இருவர், நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, விற்பனைக்கு வைத்திருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மூதாட்டியிடம் 7 சவரன் பறிப்பு

அம்பத்துார், வள்ளலார் தெருவைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மனைவி ரீகன், 63. நேற்று முன்தினம் இரவு, வாடகைக்கு வீடு தேடுவதற்காக, அம்பத்துார், மவுனசாமி மடம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது, 7 சவரன் செயினை பறித்து சென்றனர். அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

'டாஸ்மாக்' ஊழியரை தாக்கியவர் கைது

திருவள்ளூர், பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன், 45, இவர், ஆவடி அருகே உள்ள பாலவேடு, ஏ.என்.எஸ்., நகர், 'டாஸ்மாக்' கடையில், விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதி, காலனியைச் சேர்ந்த சுரேந்தர், 42, என்பவர், 120 ரூபாய் மதுபானத்தை, 100 ரூபாய்க்கு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சுரேந்தர், மணிகண்டனை தாக்கியுள்ளார். மணிகண்டன் கொடுத்த புகாரில், முத்தாப்புதுப்பேட்டை போலீசார், சுரேந்தரை கைது செய்தனர்.

மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது

அடையாறு அடுத்த பெசன்ட்நகர், பஸ் டிப்போ அருகில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்த நபர், சாஸ்திரிநகர் போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். விசாரணையில் அவர், வேளச்சேரி, முதலி தெருவை சேர்ந்த சுந்தர், 46 என்பது தெரியவந்தது. அவர் விற்பனைக்கு வைத்திருந்த, 176 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுந்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பத்திரிகை நிருபர் வீட்டில் திருட்டு

சூளைமேடு, கிருஷ்ணாபுரம் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் வசித்து வருபவர், விக்னேஷ் ராதாகிருஷ்ணன், 29; பத்திரிக்கை நிருபர். அவர், நேற்று முன்தினம் இரவு, படுக்கை அறையில் தனது மனைவி, மகனுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது, மர்ம நபர்கள், பால்கனி வழியாக உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த விலை உயர்ந்த இரண்டு மடிக்கணினிகள், 4,500 ரூபாய் பணத்தை திருடிச் சென்றது

தெரியவந்தது. சூளைமேடு போலீசார்

விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X