ரூ. 524 கோடி நிதிநிறுவன மோசடி சொத்துக்களை விற்க அலுவலகம் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஆக
2018
05:11

நாகர்கோவில்: 524 கோடி ரூபாய் மோசடி செய்த நிதிநிறுவனத்தின் சொத்துக்களை விற்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு படி களியக்காவிளையில் ஆக. 30-ல் அலுவலகம் திறக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தம்பாலையை சேர்ந்தவர் நிர்மலன். இவர் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் நிதி மற்றும் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்

நிறுவனம் பூட்டப்பட்டது. இதில் முதலீடு

செய்த 7 ஆயிரத்து 187 பேர் போலீசில் புகார் செய்துள்ளனர். இவர்களின் புகாரின் படி மோசடி தொகை 524 கோடியே 47 லட்சத்து 25 ஆயிரத்து 792 ரூபாய் ஆகும். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். நிர்மலன் உட்பட 7 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

நிர்மலன் மற்றும் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 220 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு படி இந்த சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஆக. 30-ம் தேதி மத்தம்பாலையில் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. கோர்ட்டு

வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஓய்வு பெற்ற தாசில்தார் ஜாண் அலெக்சாண்டர், பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்

ஆக்னேஷ் பொன்னி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பாசிகுமார நாயர், அசோகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி இந்த குழுவின் பொறுப்பு அதிகாரியாக இருப்பார்.

புகார் அளித்தவர்கள் தங்கள் வங்கி கணக்கு விபரங்களை இந்த அலுவலகத்தில் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று

அறிவிக்கப்பட்டுள்ளது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X