அமர்ந்து செல்வோருக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
00:36

சென்னை: 'இருசக்கர வாகனங்களில், பின்னால் அமர்ந்து செல்வோரும், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்' என, சென்னை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்; மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.


சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு:மோட்டார் வாகன

சட்டம், 1988, பிரிவு, 129 மற்றும் தமிழக அரசாணையின்படி, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஆகிய இருவரும், தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.இது தொடர்பாக, போக்குவரத்து காவல் துறை சார்பில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டப்படி, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

எனினும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், தலைக்கவசம் அணியாமல் உள்ளனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஆகிய இருவர் மீதும், மோட்டார் வாகன சட்டத்தின்படி, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
27-ஆக-201811:10:04 IST Report Abuse
G.Krishnan உண்மையிலேயே மக்களின் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால் . . . . .. . சாலை விபத்தில் சாவதை விட .. . .சாராயத்தில் சாவதே அதிகம் . . . . .சாலை விபத்தில் ஒருவர் இறந்தால் இழப்பீடு கூட கிடைக்கலாம் . . . . .சாராயம் குடித்துவிட்டு இறந்தால் எந்தவிதமான இழப்பீடு கூட கிடையாது . . . .இதற்காக தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டச்சொல்லவில்லை. . . . . .அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . . . .
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
26-ஆக-201813:53:08 IST Report Abuse
christ ஆமாண்டா சாராயத்தையும் ,சிகிரெட் விற்று மக்களை சாக அடிப்பீங்க .ஹெல்மட் போடாமல் சாகும் மக்களை பற்றி மட்டும் அக்கறை கொள்வீங்க நல்ல இருக்குடா உங்க நியாம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X