காலிப்பணியிடங்களால் விதை ஆய்வு பணிகளில் சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
09:12

தர்மபுரி: ஒன்பது பேர் இருக்க வேண்டிய, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில், மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளதால், அலுவலக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம், தர்மபுரி வனத்துறை அலுவலகம் அருகே உள்ளது. இங்கு, விதை ஆய்வு குறித்த தகவல்கள், விதை விற்பனை நிலையங்கள் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், தரமான விதைகளை விற்பனை செய்வது குறித்த, கள ஆய்வு போன்ற பணிகள் நடக்கின்றன. இங்கு, துணை இயக்குனர், கண்காணிப்பாளர், உதவியாளர் என, மூன்று பேரும், இரண்டு மாவட்டங்களில், கள ஆய்வுக்கு, நான்கு விதை ஆய்வு ஆய்வாளர்களும் பணியில் உள்ளனர். இந்த அலுவலகத்தில், இரண்டு உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், டிரைவர், இரவு காவலர் உள்பட, ஆறு பணியிடங்கள், பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. இதனால், விதை ஆய்வு செய்தல், விற்பனை உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் பணி உட்பட அனைத்து அலுவலக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, அலுவலர்கள் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும்போது, அவர்களுக்கு, சென்னையில் பணி வழங்குகின்றனர். புதிய பணியாட்களை, மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பவதில்லை. ஆனால், புள்ளி விவரங்கள் மட்டும் உடனுக்குடன் கேட்கின்றனர். சென்னை வேளாண்மை இயக்குனரக நிர்வாகத்தினர், விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு பணியாட்களை நியமனம் செய்வதில், அக்கறை காட்டுவதில்லை. இதனால், இந்த அலுவலகங்களிலும், அனைத்து பணிகளிலும் தொய்வு நிலையே நீடிக்கிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். எனவே, 'வேளாண்மைத்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X