வட்ட பாதையில் ரயில்கள் ஓடுமா? : தமிழக அரசு மனது வைத்தால் சாத்தியம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஆக
2018
00:00

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை இடையே வட்ட பாதையில், மின்சார ரயில்கள் இயக்க, ரயில்வே தயாராக உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களை, மின்சார ரயில் போக்குவரத்தால் இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.

அவ்வகையில், சென் னை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை கடற்கரை இடையே, வட்ட ரயில் பாதையில், மின்சார ரயில்

போக்குவரத்து துவங்க உள்ளது.

இதனையொட்டி, செங்கல்பட்டு - அரக்கோணம் மீட்டர் கேஜ் பாதை, 2000ம் ஆண்டில், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரை மின் மயமாக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

இதன்பின், காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே, மின் மயமாக்கும் பணி நடந்தது.

அவ்வழியில் உள்ள தக்கோலத்தில், ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை விமான ஓடுதளம், ரயில் பாதை அருகில் இருப்பதால், மின் கம்பங்கள் நட்டால், விமானம்,

ஹெலிகாப்டர் இறங்குவதில் சிக்கல் ஏற்படும் என,

தெரிவிக்கப்பட்டது.

ராஜாளிக்கு இடையூறு இன்றி, தக்கோலத்தில் இருந்து, அரக்கோணத்துக்கு, மாற்று வழியில் புதிய ரயில் பாதை அமைக்கவும், அதற்கான செலவை, ராணுவ அமைச்சகம் வழங்குவதாகவும் தெரிவித்தது.

இதனால், திருமால்பூர் - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மட்டும், மின்சார ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

திருமால்பூர் அருகே உள்ள, தக்கோலம் கல்லாறில் இருந்து, பொய்கைபாக்கம், நாகபேடு, பருத்திபுத்துார், மேல்பாக்கம் வழியாக, அரக்கோணம் வரை, 9.5 கி.மீ., புதிய அகல ரயில் பாதை பணி, 2006ல் இருந்து நடந்து வந்தது.

ராணுவ அமைச்சகம் நிதி வழங்குவதில் தாமதமானதால், பணி, 2015 வரை தாமதமாக நடந்து வந்தது.

இதன்பின், இத்திட்டத்துக்கு, ராணுவ அமைச்சகம் சார்பில், 54.57 கோடி ரூபாய் வழங்கியதால், பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு, தக்கோலம் கல்லாறு - அரக்கோணம் இடையே, புதிய அகல ரயில் பாதை பணி

முடிந்துள்ளது.

இப்பாதையில், அரக்கோணம் - ஓச்சேரி இடையே, மாநில நெடுஞ்சாலையில், ரயில்வே கேட் உள்ளது.

இதற்கு மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழ் வழங்க, நான்கு மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தும், சான்றிதழ் இன்னும் வழங்கவில்லை.

தடையில்லா சான்றிதழ் வழங்கினால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை கடற்கரை இடையே, வட்ட பாதையில் மின்சார ரயில் போக்குவரத்து துவங்க, ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது.

இது குறித்து, தக்கோலம் பொதுமக்கள்

கூறியதாவது:

தக்கோலம் - அரக்கோணம் இடையே, 9.5 கி.மீ., பாதை அமைக்க, ரயில்வேக்கு, 11 ஆண்டுகளாகியுள்ளது.

ஓச்சேரி ரயில்வே கேட்டுக்கு, மாநில அரசு தடையில்லா சான்றிதழ் தாமதமின்றி வழங்க வேண்டும்.

வட்ட பாதையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை கடற்கரை இடையே, மின்சார ரயில் போக்குவரத்து தாமதமின்றி துவங்க வேண்டும்.

வட்ட பாதையில் ரயில் போக்குவரத்து

துவங்கப்படும் போது, தற்போது, கடற்கரை - திருமால்பூர் இடையே இயக்கப்படும் ரயில்கள், அரக்கோணம் வரை நீட்டிக்க வேண்டும்.

வட்ட ரயில் பாதையில், தினமும், 10 ரயில்களாவது இயக்க வேண்டும். தென்மாவட்டங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து, இவ்வழியாக இயக்க வேண்டும்.

காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணத்தில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


- நமது நிருபர் -

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X