நிலத்தடி நீரை சேமிக்க ரூ.9.60 கோடியில்... 320 தடுப்பணைகள்! 100 நாள் தொழிலாளர்கள் மூலம் பணி திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஆக
2018
05:23

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், ஏரி, ஆறு போன்ற நீர்வரத்து கால்வாய்களில், 9.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம், 320 புதிய தடுப்பணைகள்,100 நாள் தொழிலாளர்கள் மூலம், கட்டும் பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன.


ஒவ்வொரு தடுப்பணைகளிலும், குறைந்தபட்சம், 1,050 கன மீட்டர் (10.50 லட்சம் லிட்டர்) தண்ணீர் சேமிக்க முடியும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், மொத்தம், 526 ஊராட்சிகள் உள்ளன. 2015ம் ஆண்டுக்கு பின், பருவ மழை சரியாக பெய்யாமல் ஏமாற்றியதால், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.

குறிப்பாக, திருவள்ளூர், பூண்டி, எல்லாபுரம், கடம்பத்துார், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

வறட்சி இதுதவிர, மேற்கண்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், விவசாய கிணறுகளிலும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன. இதைஅடுத்து, மாவட்ட நிர்வாகம், மேற்கண்ட, 10 ஒன்றியங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஏரி மற்றும் ஆறுகளில் இருந்து வரும் நீர்வரத்துக் கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு தீர்மானித்து, மொத்தம், 320 புதிய தடுப்பணைகளுக்கு, தலா, 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 9.60 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்தது.


டெண்டர் : இந்த தொகை மூலம், கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டும் பணியில், நுாறு நாள் தொழிலாளர்கள் ஈடுபடுத்தவும், மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது.அந்த வகையில், ஒவ்வொரு தடுப்பணையும், குறைந்தபட்சம், 5 மீட்டர் முதல், ஏழரை மீட்டர் வரை அகலம், ஒன்றரை மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணைகள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது.இந்த பணிகளை,

ஒன்றிய நிர்வாகம் மேற்பார்வையில் நடக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த தடுப்பணைகள் பணிகள், செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, தடுப்பணைகள் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்து மழை பெய்தால் தடுப்பணையில், குறைந்தபட்சம், 1,050 கன மீட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். இதனால், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என, நம்பப்படுகிறது.


இது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இம்மாதம் முதல், ஊராட்சிகளில் நீர்வரத்துக் கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு

உள்ளன.


அறிவுறுத்தல் : நுாறு நாள் வேலை தொழிலாளர்கள் மூலம் கட்டப்படும் தடுப்பணை பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இப்பணிகள், செப்டம்பர் மாதத்திற்குள், முடிக்க திட்டமிட்டுஉள்ளோம். தற்போது, 50 சதவீதம் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுஉள்ளன.

மீதமுள்ள தடுப்பணைகள் விரைந்து முடிக்க அந்தந்த ஒன்றிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப் படும். மாவட்டத்தில், 10 ஒன்றியத்தில் மட்டுமே, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


ஆளும் கட்சியினர் ஆதிக்கம் : ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும், தடுப்பணைகள், நுாறு நாள் தொழிலாளர்கள் கொண்டு தான் கட்ட வேண்டும். ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் ஆளும் கட்சி நிர்வாகிகளே, தலையிட்டு தடுப்பணைகள் கட்டி வருகின்றனர்.இதனால், நுாறு நாள் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் கடும் சிரமப்படுகின்றனர். ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு சில அதிகாரிகள் துணை போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X