பாரம்பரிய சின்னங்களில் விளக்குகள் இரவிலும் காண பயணியர் ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஆக
2018
05:31

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை, சுற்றுலாப் பயணியர், இரவிலும் கண்டு களிக்க, ஒளிவிளக்குகள் அமைக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல்லவ பாரம்பரிய சிற்பக்கலைச் சின்னங்களுக்கு, மாமல்லபுரம் புகழ்பெற்றது. உலகில், இவ்வூரில் மட்டுமே, பலவகை சிற்பக்கலைகள், ஓரிடத்தில் இடம்பெற்று, சர்வதேச பாரம்பரிய கலை சுற்றுலா இடமாக சிறப்பு பெற்றுள்ளது.

கடற்கரை கற்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சனன் தபசு, குடைவரை மண்டபங்கள், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவை என, 32 பாரம்பரிய கலைச்சின்னங்களுடன், சிற்பக்கலை அருங்காட்சியக இடமாக விளங்குகிறது.

இவற்றை, தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது. இந்திய, சர்வதேச பயணியர், கண்டு மகிழ்கின்றனர்.

தற்போது, சுற்றுலா மேம்பாடால், பயணியர் குவியும் நிலையில், காலை, 6:00 - மாலை, 6:00 மணி வரை, அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாலை, 6:00 மணி கடந்து வருவோர், அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே, வெளிப்புறத்திலிருந்து, இரவிலும் காணும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன், துறை சார்பில் பிரகாச ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டன. இரவிலும் கலைச்சின்னங்கள் பிரகாசித்து, பயணியர் ரசித்தனர்.

நாளடைவில், விளக்குகள் பராமரிப்பின்றி வீணானது. தொல்லியல் வளாகங்களில், இருள் சூழ்ந்துள்ளது.

கோடை கால, பகல் நேர நீட்சியால், இரவு, 7:30 மணி வரை பயணியர் வருகின்றனர். விடுதிகளில் தங்கும் பயணியர், இரவில் உலா வருகின்றனர்.இரவில், வாகன முகப்பு விளக்கை ஒளிரவைத்து, சிரமத்துடன்

காண்கின்றனர்.

இச்சூழலில், இரவிலும் கண்டு ரசிக்க, பிரகாச விளக்குகள் அவசியமான நிலையில், மின்கட்டண பிரச்னையால், இதை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்தப்படுவதாக தெரிகிறது.

இந்நிலையில், மின் கட்டணத்தை பொருட் டாக கருதாமல், விளக்கு அமைத்து இரவிலும் பாரம்பரிய சின்னங்களை காண நடவடிக்கை எடுக்க, சுற்றுலா பிரியர்கள்

வலியுறுத்துகின்றனர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X