 தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள்... அதிகரிப்பு!  சாலை விரிவாக்கம், பாதுகாப்பு தேவை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
23:37

ஸ்ரீபெரும்புதுார்: 'தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் சாலை விபத்துகளை குறைக்க, சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும்; சாலையில் பயணிப்போருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என,சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை- - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம் முதல், காஞ்சிபுரம் வரை இந்த சாலையில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதனால், இந்த சாலையில் செல்லவே, வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக தொழிற்சாலைகள் உள்ளதால், பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.


விதி மீறல் : இதனால், போக்குவரத்து நெரிசலும், அதிக விபத்துகளும் இந்த சாலையில் நிகழ்கின்றன. எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றாதது; மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவது; மொபைல் போனில் பேசிய படி செல்வது போன்ற குற்றங்களால், அப்பாவி மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலை பராமரிப்பு இன்றி, மிக மோசமான நிலையில் உள்ளதாலும் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களும் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.


பராமரிப்பு இல்லை : ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சுங்க சாவடியில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் இங்கு வசூலாகும் தொகையில், 20 சதவீதம் பணத்தை கூட, சாலை பராமரிப்புக்கு செலவழிப்பதில்லை. சுங்கச்சாவடி அருகே உள்ள சாலைகள் கூட பராமரிப்பு இன்றி உள்ளன. சாலையின் இரு புறமும் மண் குவியல், செடிகளும் வளர்ந்து கிடப்பதால், விபத்துகள் அதிகரிக்கின்றன. மேலும், நெடுஞ்சாலையோரம் அரசு பஸ் நிற்பதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே, அரசு பஸ்கள் நின்று செல்ல, சாலையோரங்களில் தனி இடத்தை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


ஸ்ரீபெரும்புதுார் ஏ.எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் கூறியதாவது: விபத்தை குறைக்க போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


20 சதவீதம் குறைவு : ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் பகுதியில் விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில், இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிய சாலை தடுப்புகளை வைத்துள்ளோம்.இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, 125 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவை கடந்த ஆண்டு ஜன., முதல் ஆக., வரை நடந்த விபத்தை விட, 20 சதவீதம் குறைவு தான். இனி வரும் காலங்களில் மேலும் விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


சுங்கச்சாவடியில் எப்போதும் நெரிசல் : ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அந்த இடம் நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர, தனி வழிகள் இங்கு ஒதுக்கப்படவில்லை.


மாயமான விபத்து சேவை மையம் : தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குபவர்களை மீட்டு உடனடியாக முதலுதவி கொடுத்து சிகிச்சை அளிக்க, ஸ்ரீபெரும்புதுார் அருகே வடமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில், அவசர விபத்து சிகிச்சை மையம், ஆறு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.துவக்கத்தில், இந்த மையம், 24 மணி நேரமும் செயல்பட்டது. ஆம்புலன்சுடன் ஓட்டுனரும் எப்போதும் தயார் நிலையில் இருந்தார். இந்த மையம் துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே மூடப்பட்டது. அந்த மைய கட்டடமும் சமீபத்தில் அகற்றப்பட்டு விட்டது.ஸ்ரீபெரும்புதுாரில் புதியதாக விபத்து சேவை மையம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X