| மேம்பால பணிக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லை? : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் Dinamalar
மேம்பால பணிக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லை? : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
23:38

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரி ஏரிக்குள், புதிய ரயில் நிலையம் அருகே கட்டப்படும் மேம்பால பணிக்கு, சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுவதாக புதிய புகார்

எழுந்துள்ளது.காஞ்சிபுரம் நகரில் காமாட்சியம்மன் கோவில் தெரு, கிழக்குப்பகுதியில் பழைய ரயில் நிலையம் உள்ளது; பொன்னேரிக்கரை செல்லும் வழியில், புதிய ரயில் நிலையம் இயங்குகிறது.


வாகனங்கள் வரிசை : இதில், புதிய ரயில் நிலையத்தை கடந்து தான், சென்னை, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டும். எனவே, காஞ்சிபுரத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்களும், அங்கிருந்து காஞ்சிபுரம் நோக்கி வரும் வாகனங்களும் புதிய ரயில் நிலையம் வழியாக செல்கின்றன.

ஒரு நாளைக்கு, 10க்கும் மேற்பட்ட ரயில்கள், காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வதால், அத்தனை முறையும், 'லெவல் கிராசிங்கில்' வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

பல ஆண்டுகளாக, இப்பகுதியில் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஒவ்வொரு தேர்தலிலும், பொதுமக்களின் கோரிக்கை இதுவாகவே இருந்தது.

ஒரு வழியாக, கடந்தாண்டு, புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலைத்துறைக்கு, 50 கோடி ரூபாயை

தமிழக அரசு ஒதுக்கியது. அது முதல், பொன்னேரி ஏரிக்குள் பணிகள்

துவங்கி நடை பெறுகின்றன.

தடையில்லா சான்று

ஏரியை பாழாக்கி, அங்கு மேம்பாலம் கட்டுவதாக சிலர் தொடர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இருந்தும்,

மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறாமல், மேம்பால பணிகள் நடைபெறுவதாக

புகார் எழுந்துள்ளது. செங்கழுநீரோடை வீதியைச் சேர்ந்த, அயுப்கான் என்பவர், காஞ்சிபுரம் பொன்னேரி ஏரிக்குள் கட்டப்படும் மேம்பாலம், சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறப்படவில்லை.

எனவே, பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என, சென்னை சுற்றுச்சூழல் துறைக்கு புகார்

தெரிவித்துள்ளார்.

புகாரில் கூறப்பட்டுள்ளது போல், அனுமதி பெறவில்லை என்றால், உரிய நடவடிக்கை எடுங்கள் என, மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு, சுற்றுச்சூழல் துறை இயக்குனர் உதயன், பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஏரிக்குள் மேம்பாலம் கட்டுவதை பலரும் எதிர்த்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல், பாலம் கட்டப்படுவதாக எழுந்த புகார்,

திடீர் சர்ச்சையை

எழுப்பியுள்ளது.

 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X