நஷ்டத்தில் இயங்கும் 'டான்டீ' தோட்டம்; சம்பளம் வழங்க கூட நிதியில்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
04:29

கூடலுார் : டான்டீ தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், சம்பளம் வழங்க கூட நிதியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ), தாயகம் திரும்பிய மக்களின் வேலை வாய்ப்புக்காக, நீலகிரி மாவட்டம் குன்னுாரை தலைமையிடமாக கொண்டு, 1969ல் துவங்கப்பட்டது.

தற்போது, டான்டீ நிறுவனத்தின் கீழ், நீலகிரியில் சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், பாண்டியார், நடுவட்டம், குன்னுார், கோத்தகிரி; கோவை மாவட்டம் வால்பாறையில் ரயான், லாசன் ஆகிய தேயிலை தோட்டம், தொழிற்சாலைகள்

இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணியாற்றும் பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் இருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுக்கு பின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் நல்ல லாபத்தில் இயங்கிய டான்டீ, தேயிலை விலை வீழ்ச்சி, சரியான நிர்வாகமின்மை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தேயிலை தோட்டங்கள் பராமரிப்பு, தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது, 4,000 நிரந்தர தொழிலாளர்கள்,

250 தற்காலிக ஊழியர்கள், பணியாற்றி வருகின்றனர். பராமரிப்பு இல்லாத பல நுாறு

ஏக்கர் தேயிலை தோட்டங்கள் வனவிலங்குகளின் மேய்ச்சல் நிலமாக மாறி விட்டது. அப்பகுதியை வனத்துறைக்கு வழங்குவதற்கான, சர்வே பணிகளும் நடந்து முடிந்துள்ளது.

தொடரும் நஷ்டம்

இந்நிலையில், டான்டீயில் தொடரும் நஷ்டத்தால் நிதிநிலையை காரணம் காட்டி, சில ஆண்டுகளாக ஊழியர்கள், பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம்

வழங்குவதில்லை. அதே நிலை, தற்போது தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கபட வில்லை. தொழிலாளர்ளுக்கு சம்பளம் வழங்க தாமதம் ஆனதால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, 20ம் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டது.


'விசாரணை நடத்த வேண்டும்'

தொழில் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தால் பத்து ஆண்டுகளாக தேயிலை தோட்டத்தில் உரம் இடுவது உள்ளிட்ட பராமரிமப்பு பணிகள் மேற்கொள்ளபடவில்லை. மேலும், 2014ல் இங்கு பணியாற்றி வந்த, 3,000 தற்காலிக தொழிலாளர்களை பணியிலிருந்து நிறுத்தி விட்டனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய டான்டீக்கு சில ஆண்டுகளுக்கு முன், அரசு வழங்கிய நிதியும் முறையாக பயன்படுத்தவில்லை; இது தொடர்பாக, தனியாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், தற்போது அரசு மீண்டும் வழங்குவதாக கூறியுள்ள,

30 கோடி ரூபாய் நிதியை, முறையாக பயன்படுத்தினால், நஷ்டத்திலிருந்து டான்டீயை மீட்க

முடியும்,' என்றனர்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X