கேரள பேரழிவு,'பாடம்' நடத்தியும் பயனில்லை; மலை மாவட்டத்தில் விதிமீறலுக்கு பஞ்சமில்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
04:29

குன்னுார் : குன்னுாரில் விதிமீறிய கட்டுமானங்கள் அதிகரித்தும், அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


குன்னுார் காந்திபுரம் - காட்டேரி இடைப்பட்ட இடத்தில் காளான் பண்ணை அமைப்பதாக கூறி, பொக்லைன் பயன்படுத்தி சாலையோர மலைப்பகுதி குடைந்தெடுக்கப்பட்டது. குன்னுார் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதற்கிடையில், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக, திடீரென 'சீல்' அகற்றப்பட்டு, மீண்டும் பணிகள் நடந்து வருகின்றன.


இதே போல, 8வது வார்டு ரேலி காம்பவுண்ட் பகுதி மற்றும் ஆற்றோரங்கள் முழு அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒரு மாதத்திற்கு முன்பு கட்டுமான பணிக்கு, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். ஆனால், அங்கும் 'சீல்' அகற்றப்பட்டு மீண்டும் கட்டுமானங்கள் நடந்து வருகிறது. மேலும், கேத்தி பாலாடா அருகே கட்டுமான பணிக்காக, தேயிலை தோட்டம் அழிக்கப்பட்டு, விதிமீறி சாலை மற்றும் கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.


குன்னுார் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறுகையில், ''காந்திபுரம் - காட்டேரி இடைப்பட்ட இடத்தில் அனுமதியின்றி கட்டுமானங்கள் நடந்து வந்ததால் 'சீல்' வைக்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு தடுப்புச்சுவர் மட்டுமே அமைப்பதாக கூறி அனுமதி பெற்றுவிட்டனர்.

அங்கு, எக்காரணத்தை கொண்டும் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆற்றோரங்களில் நடக்கும் விதிமீறிய கட்டுமானங்களை வருவாய் துறையினர் தான் கட்டுப்படுத்த வேண்டும்,'' என்றார்.



கட்டுப்பாடின்றி கட்டுமானம்!

மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''மேற்கு தொடர்ச்சி மலையை ஆய்வு செய்த, மாதவ் காட்கில்; கஸ்துாரி ரங்கன் கமிட்டி, 'மலையில் நடக்கும் கட்டுமானங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்' என, அறிவித்தனர். அவற்றை கேரளா மீறியதால் சமீபத்தில், இயற்கை பேரழிவு ஏற்பட்டது. இதனை உணராமல், நீலகிரியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கட்டுமானங்கள் உயர்ந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விதிமீறலுக்கு அரசியல்வாதிகள்; அரசு அதிகாரிகள் காரணமாக இருப்பது, பல்வேறு பேரழிவுகளுக்கு வழி வகுக்கும்,'' என்றார்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X