விவசாயிகள் கவலை! தொடர் மழையால் குறைந்த இலை வரத்து.. நாளொன்றுக்கு 5,000 கிலோ கொள்முதல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
04:29

ஊட்டி : நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக, கூட்டுறவு தொழிற்சாலைகளில் இலை வரத்து அடியோடு குறைந்தது.


நீலகிரி மாவட்டத்தில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள, 30 ஆயிரம் அங்கத்தினர்கள், தங்களது தோட்டத்தில் பறிக்கும் இலையை, தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.


90 சதவீத கொள்முதல் :


இந்நிலையில், நடப்பாண்டில் பெய்த பரவலான மழையால், இலை வரத்து வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. ஜூலை மாதம் நிலவரப்படி, இலை கொள்முதல், 90 சதவீதத்தை எட்டியது.


40 ஆயிரம் கிலோ:


மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்வதால், இலையை கொப்புள நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெயில் தென்படாமல் இலைகள் துளிர்விடாமல் இருப்பதால், இலை வரத்தும் குறைய துவங்கியுள்ளது.


கடந்த மூன்று மாதங்களாக, நாளொன்றுக்கு, 40 ஆயிரம் கிலோவை எட்டிய இலை கொள்முதல், கடந்த ஒரு வாரமாக, கூட்டுறவு தொழிற்சாலைகளில், சராசரியாக, 10,000 கிலோவாக குறைந்துள்ளது. மேலும், மேற்குநாடு, இத்தலார், கிண்ணக்கொரை, பிக்கட்டி உள்ளிட்ட சில தொழிற்சாலைகளில், 5,000 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், தேயிலை துாள் உற்பத்தி குறைந்ததால் செலவினங்களை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.


ஆட்கள் இல்லை:


விவசாயிகள் கூறுகையில்,' மழை தொடர்ந்தால், இலை பறிக்க ஆட்கள் கிடைக்காமல், தோட்டங்களில் கரட்டு இலையாக மாறி வீணாகி வருகிறது. இதனால், தொழிற்சாலைகளுக்கும் இலை வழங்க முடியாத சூழல் உள்ளது. கடும் குளிரான காலநிலையில், கூடுதல் கூலி

கொடுத்தாலும் யாரும் பணிக்கு வருவதில்லை,' என்றனர்.


தொழிற்சாலை நிர்வாகிகள் கூறுகையில், 'தொடர் மழையால் வரத்து அடியோடு குறைந்ததால், தேயிலை துாள் உற்பத்தி அளவும் குறைந்துள்ளது. துாள் உற்பத்திக்கான 'ஷிப்ட்'கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு விவசாயிகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுவருகிறது. தொழிலாளர்களும் வேலை இழந்து வருகின்றனர். மழை குறைந்தால் நிலைமை சரியாகி விடும்,' என்றனர்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X