கீழணையில் போக்குவரத்து துவங்க... வாய்ப்பில்லை...! பாலத்தின் உறுதி தன்மை அறிய முடிவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
04:57

காட்டுமன்னார்கோவில்: முக்கொம்பு அணை உடைத்ததால் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆய்வுகுழுவின் ஆய்விற்கு பிறகே எந்த முடிவும் எடுக்க பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் மிக பழமையான, வரலாற்று சிறப்பு மிக்கது காவிரி நீர் பாசனம். சோழ மன்னனால் அங்கீகரிக்கப்பட்ட இப்பாசன முறையின் மூலம், கர்நாடகத்தில் இருந்து காவிரியில் பாயும் தண்ணீர் மேட்டூர் வரும். அங்கிருந்து திறக்கப்படும் நீர் முக்கொம்பில் தேக்கப்பட்டு, அதில் இருந்து கல்லணையில் தேக்கப்படும். அதில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறக்கப்படுகிறது. கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து 67 மைல் துாரம் கடந்து வரும் காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றில் வந்து தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழணையில் தேக்கப்பட்டு கடலுார், நாகை, தஞ்சை மாவட்டத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இதில் இருந்துதான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி சென்னைக்கு குடி நீர் கொண்டு செல்லப்படுகிறது.

அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1836ம் ஆண்டு சர் ஆர்தர் கார்டன் என்பவரால் கட்டப்பட்டதுதான் கீழணை. 9 அடி நீர் தேக்கம் கொண்ட கீழணையில் 150.13 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. அணையுடன் கூடிய பாலமாக விளங்கும் கீழணை பாலம் சென்னை கும்பகோணத்தின் முக்கிய இணைப்பு பாலமாக அமைந்துள்ளது. 182 ஆண்டுகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கிய இப்பாலம் வலுவிழந்ததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரசாயன பூச்சு மூலம் பலப்படுத்தும் பணி நடந்தது.

அப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் முடிந்து மீண்டும் பஸ் போக்குவரத்து மட்டும் துவங்கப்பட்டது. லாரி உள்ளிட்ட பிற கனரக வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இன்று வரை அதே நிலை தொடர்கிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி அதிக அளவு தண்ணீர் வந்ததால் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 8 நாள் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின் மீண்டும் இம்மாதம் 16ம் தேதியில் இருந்து அதிகபட்சமாக 2.5 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்ததால் அதே வேகத்தில் அனைத்து ஷட்டர்கள் மூலமும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதிக தண்ணீர் வந்த காரணத்தால் கீழணை பாலத்தை தொட்டு தண்ணீர் சென்றது. இதனால் பாலத்தின் பாதுகாப்பு கருதி கடந்த 16ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து முதல் நிறுத்தப்பட்டது.

இன்று வரை 14 வது நாளாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முக்கொம்பு அணை உடைந்ததால் நேற்றைய நிலையிலும் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் செல்கிறது. முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுப்பணி துறை அதிகாரிகள், தண்ணீர் வரத்து குறைந்த போதிலும் கீழணை பாலத்தில் போக்குவரத்து துவங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

தண்ணீர் வெளியேற்றம் முற்றிலும் நின்ற பின் வல்லுநர் குழுவினர் மூலம் பாலத்தின் உறுதி தன்மை ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன் பின்னரே கீழணை பாலத்தில் பஸ் போக்குவரத்து துவங்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X