அரசு மருத்துவமனை ஊழியர்கள் வசூல் ராஜாக்கள்: தூங்குகிறதா கண்காணிப்பு குழு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஆக
2018
00:55
பதிவு செய்த நாள்
ஆக 31,2018 00:02

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்டெரச்சரில் அழைத்து செல்ல நோயாளிகளிடம் 20 முதல் 50 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இங்கு 2,600 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களது நோயின் நிலையை அறிய இ.சி.ஜி., எம்.ஆர்.ஐ., மற்றும் சி.டி., ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.

இதற்காக நடக்க முடியாத நோயாளிகளை ஸ்டெரச்சரில் அந்தந்த பிரிவுக்கு அழைத்து சென்று பரிசோதனைக்கு பின் மீண்டும் வார்டுக்கு அழைத்து வரவேண்டும்.


இப்பணியில் மருத்துவமனை, தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

நேற்று வார்டு எண் 108ல் மூதாட்டி ஒருவரை இ.சி.ஜி., எடுக்க ஸ்டெரச்சரில் ஊழியர் ஒருவர் அழைத்து வந்தார். இ.சி.ஜி., எடுத்து வெளியே வருவதற்குள் மூதாட்டி உறவினரிடம் 20 ரூபாய் வசூலித்து விட்டு ஊழியர் தலைமறைவானார். இதனால் வார்டுக்கு மற்றொரு ஸ்டெரச்சரில் அழைத்து சென்ற ஊழியரும் 20 ரூபாய் வசூலித்துள்ளார். இதுபோன்று எதற்கெடுத்தாலும் வசூலிப்பதில் தான் ஊழியர்கள் ஆர்வமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

நோயாளிகளிடம் கட்டாய வசூல் செய்யும் ஊழியரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டீன் மருதுபாண்டியன் கண்காணிப்பு குழுவை நியமித்தார். அக்குழு செயல்பாடின்றி மீண்டும் வசூல் தொடர்கிறது.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஆக-201812:16:03 IST Report Abuse
Bhaskaran திருதவேமுடியாது ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X