மாவட்ட அளவிலான மாதாந்திர போட்டி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2018
23:51

ராமநாதபுரம்:மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வருமாறு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு சார்பில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.

மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஹாக்கி பயிற்சியாளர் தினேஷ்குமார் வரவேற்றார்.

தடகளம், நீச்சல், ஹேண்ட்பால், கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. 446 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) ராஜா பரிசுகளை வழங்கினார். நீச்சல் பயிற்சியாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விவரம்:

நீளம் தாண்டுதல்: கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் பிரஜோத், ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவி சினேகா முதலிடம் பெற்றனர். 1500 மீ., ஓட்டத்தில் செய்யது அம்மாள் கலைக்கல்லுாரி மாணவர் ஜவஹர் கணேஷ், கீழக்கரை செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி ஹரிஸ்மா முதலிடம் பிடித்தனர்.

குண்டு எறிதலில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் நித்திஸ்குமார், செய்யது அம்மாள் கலைக்கல்லுாரி மாணவி கார்த்திகாதேவி முதலிடம் பெற்றனர்.

100 மீ., ஓட்டத்தில் ராமநாதபுரம் சரவணன், ரோசினி பாத்திமா, 800 மீ., ஓட்டத்தில் செய்யது அம்மாள் கலைக்கல்லுாரி மாணவர் ஜவஹர் கணேஷ், ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி சினேகா முதலிடம் பெற்றனர்.

கையுந்து பந்து (ேஹண்ட்பால்) போட்டியில் டாக்டர் ஜாகீர் உசேன் கைப்பந்து கழகம், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.

நீச்சல் போட்டி: 100 மீ., ப்ரீ ஸ்டைல் போட்டியில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் தவ்பீக் இமான் முதலிடம்.

50 மீ., ப்ரீ ஸ்டைலில் லுாயிஸ் லெவல் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனாதேவி முதலிம் பெற்றார். 50 மீ., ப்ரீஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் நேஷனல் அகாடமி பள்ளி மாணவர் முகம்மது இர்பான் முதலிடம் பெற்றார்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X