அவசர சிகிச்சையில் அலட்சியம்! காட்சிப்பொருளாக மருத்துவமனை கட்டடம்  முதலுதவி சிகிச்சைக்கும் போராடும் அவலம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
00:12

மடத்துக்குளம்: அவசர சிகிச்சைக்காக மடத்துக்குளம் அரசு மருத்துவனைக்கு செல்பவர்கள், காட்சிப்பொருளாக திறக்கப்படாமல்

உள்ள கட்டடத்தை பார்த்து விட்டு, வேதனையோடு திரும்பி செல்லும், அவலத்துக்கு,

அரசியல்வாதிகளின், அலட்சியம் முக்கிய காரணமாகியுள்ளது

மடத்துக்குளம் நால்ரோட்டில், 1950ல், பஞ்சாயத்து யூனியன் மருந்தகம் தொடங்கப்பட்டது.

பின், 1958ல், அன்றைய, உள்துறை அமைச்சர், பக்தவச்சலத்தால் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. நீண்ட இடை

வெளிக்கு பிறகு, 1992ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றம் செய்யப்

பட்டது.

கடந்த, 1996ல், சித்த மருத்துவ பிரிவு துவக்கப்பட்டது. மடத்துக்குளம் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்த நிலையில், இதை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த, 2009ல், மடத்துக்குளம் தனி தாலுகாவாக செயல்பட தொடங்கியதிலிருந்து, இந்த கோரிக்கை தீவிரமடைந்தது. இதன் எதிரொலியாக, 2015ல், தாலுகா அரசு மருத்துவமனையாக மடத்துக்குளம் சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டது.

தாலுகா மருத்துவமனைக்கு, புதிய கட்டடம் கட்டும் பணி, 2015, ஆக.,ல்

தொடங்கியது. இரண்டு தளத்தில், 730 சதுர மீட்டர் பரப்பில் கட்டடம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்து, பணிகள் நிறுத்தப்பட்டன.தற்போது வரை புதிய கட்டடம் திறக்கப்படாமல், நெருக்கடியான இடத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான வசதிகளுடனே, தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தேசிய

நெடுஞ்சாலையில்,

இம்மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், விபத்தில் அடிபடுபவர்களை கூட அவசர சிகிச்சைக்காக, உடுமலைக்கு அழைத்து வரும் நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து, அதிகரித்து, நால்ரோடு, பஸ்ஸ்டாண்ட், மற்றும் கிராமசாலைகளில்

தொடர்ந்து, விபத்து ஏற்படுகிறது.

இதில், பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. விபத்து பகுதியிலிருந்து சராசரியாக 10 முதல் 20 கி.மீ., தொலைவு பயணிக்கும்போது, காயங்களின் பாதிப்பு அதிகமாகி, பலவித இழப்புகள் ஏற்படுகிறது. இதனால், உடனடியாக அரசு மருத்துவமனையை திறக்க வேண்டும்,'

என்றனர்.

எதுக்கு கட்டினாங்க?

மடத்துக்குளம் தெற்கு கண்ணாடிபுத்துார் அரசுபள்ளி அருகே உள்ள முதல் உதவி சிகிச்சை மைய கட்டடம் கட்டப்பட்ட, செயல்பாடின்றி பூட்டப்

பட்டுள்ளது.

சமூக சுகாதார

வளர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் தேவை மற்றும் பயன்பாடுகள் குறித்து அப்பகுதி மக்களுக்கே தெரியவில்லை. இத்தகைய செயல்பாடுகளால்,

அரசு நிதி வீணாகி, பல்வேறு முக்கிய திட்டங்களின் நோக்கமும் பாழாகி வருகிறது.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X