இன்னும் எத்தனை காலம்? நீர்நிலைகள், சாலைகளை மீட்காமல் வேடிக்கை... கோர்ட் உத்தரவு மதிக்காத கோவை அதிகாரிகள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
02:05

நீர்நிலைகள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவை, கோவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பதற்கு, அரசியல் தலையீடே காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை நகரில், நொய்யல் பாயும் எட்டு குளங்கள், மேம்பாட்டுப் பணிக்காக, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன; இவை உட்பட நகரிலுள்ள குளங்கள், சிறிய அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் என பல விதமான நீர் நிலைகளும், அரசுத் துறைகளாலும், தனியாராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காக்கள், சாலைகள் என அரசுக்குச் சொந்தமான இடங்கள், ஆக்கிரமிக்கப்படுவது அதிகமாகியுள்ளது.

இவற்றில், நொய்யல் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று, 2016ல் ஐகோர்ட் உத்தரவிட்டது; ஆக்கிரமிப்புகளை, 2017 செப்டம்பருக்குள் அகற்றி விடுவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இன்று வரை முழுமையாக அகற்றவில்லை. மாறாக, சாலை விரிவாக்கம், இணைப்புச் சாலை என்ற பெயர்களில், நொய்யல் கால்வாய்களுக்கு சமாதி கட்டுவது அதிகரித்துள்ளது.

பி.எஸ்.யு.பி., திட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்பும், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள், வாய்க்கால் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடுகள் தரப்படவில்லை; அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்படவில்லை.

அதேபோன்று, 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்புகள் தொடர்பான பல்வேறு வழக்குகளிலும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்ற உத்தரவு, இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் சாலையை ஆக்கிரமித்துள்ள வீடுகளில் வசிப்போருக்கு மாற்று இடம் கொடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவும் மதிக்கப்படவே இல்லை; ஐகோர்ட் அளித்த காலக்கெடு முடிந்து, கோர்ட் அவமதிப்பு வழக்குகள் இரண்டு தாக்கலாகியும், அதை நிறைவேற்ற, இங்குள்ள அதிகாரிகள் தயாராக இல்லை. இவை ஒரு புறமிருக்க, நடைபாதை, சாலையோரம் என பல இடங்களும், 'ஆவின்' பாலகத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம் என பல துறைகளுக்கும் இருக்கிறது; துறைகளை ஒருங்கிணைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரமும், கடமையும், மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது. ஆனால், அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு பயந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அனைத்துத்துறை அதிகாரிகளும் பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகின்றனர்.

ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதை விட, ஆளுங்கட்சியினரை திருப்திப்படுத்துவதிலேயே குறியாகவுள்ளனர். ஐகோர்ட் சிறப்புக் குழு அமைத்து, கோவையில் நீர் நிலைகள் உட்பட அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்தால், அதிர்ச்சி தரும் அளவுக்கு விபரம் கிடைக்கலாம். எனவே, அதனை சட்டரீதியாக கோருவதற்கு, சில அமைப்புகள் தயாராகி வருகின்றன; அதற்கு முன்பாகவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பது நல்லது.


-நமது நிருபர்-

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Rogan - coimbatore,இந்தியா
04-செப்-201814:23:24 IST Report Abuse
M.Rogan கோவை S.I.H.S. காலனி பாலம் பல ஆண்டுகளாக இழுத்து கொண்டிருப்பதை தினமலர் கண்டுகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X