சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை 50 படுக்கை வசதி கட்டடம் என்னாச்சு?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:53

சென்னை : சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சென்றால், இடப்பற்றாக்குறை காரணமாக, முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது.


சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், 1970க்கு முன் துவங்கப்பட்டது. இங்கு, பொது மருத்துவம் மற்றும் விபத்து அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, 10 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக செயல்படுகிறது.


முதலுதவி:


விபத்து, அவசர சிகிச்சைக்காக, இந்த மருத்துவமனைக்கு அதிகம் பேர் செல்கின்றனர். குறிப்பாக, கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் விபத்து, அவசர சிகிச்சைக்கு, பாதிக்கப்பட்டவர்கள் இங்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.மேல் சிகிச்சை தேவைப்பட்டால், முதலுதவி அளித்து, ராயப்பேட்டை அல்லது அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.


பெரிய அளவில் விபத்துகள் நடந்து, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அனுமதிக்கப்பட்டால், முதலுதவி சிகிச்சை அளிக்க, மருத்துவமனையில் இடவசதி இல்லை.ஜூலையில், கந்தன்சாவடி மருத்துவமனை கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள், ஒன்றன் பின் ஒன்றாக வந்ததால், இடவசதி இல்லாமல், மருத்துவமனை நிர்வாகம் திணறியது. பரங்கிமலை ரயில் விபத்தில் சிக்கியவர்களும், இடவசதி இல்லாமல் சிரமப்பட்டனர்.


ரூ.22 கோடி :


இது குறித்து, மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது:பொது சிகிச்சைக்கு இடவசதி போதுமானதாக உள்ளது. ஒன்று, இரண்டு பேர் காயமடைந்து வந்தால், முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு அனுப்பி விடுவோம்.அதிகமானோர் வரும்போதும், இட நெருக்கடி ஏற்படுகிறது. பெரிய அளவில் விபத்து நடக்கும் பகுதியில் இருந்து, ஒரு ஆம்புலன்சில், ஒன்று, இரண்டு பேரை அழைத்து வருவர்.உடனே, அந்த ஆம்புலன்ஸ், அடுத்த நபரை அழைத்து வர சென்றுவிடும்.


இதற்கிடையில், முதலுதவி சிகிச்சை அளித்த நபர்களை, மேல் சிகிச்சைக்கு அனுப்ப, உடனே ஆம்புலன்ஸ் வருவதில்லை. அதுவரை, காயமடைந்தவரை படுக்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு, இடவசதி இல்லை.அடுத்த சில நிமிடத்தில், காயமடைந்தவர்கள் வந்து கொண்டே இருப்பர். போதுமான மருந்து, ஊழியர்கள் இருந்தாலும், இடவசதி இல்லாதபோது, கவனிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.


இதே வளாகத்தில், 22 கோடி ரூபாயில், 50 படுக்கை வசதி கொண்ட, 6 மாடி கட்டடம் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. அவை, நிர்வாக அனுமதிக்காக காத்திருக்கிறது. விரைந்து நிதி ஒதுக்கி, கூடுதல் கட்டடம் கட்டி, இடப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X