| போலீஸ் டைரி Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:53

பெண்ணிடம் 20 சவரன் பறிப்பு

பெரவள்ளூரைச் சேர்ந்தவர், ரேவதி, 38. நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது கழுத்திலிருந்த, 20 சவரன் செயினை பறித்து சென்றனர். பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் 3 சவரன் நகை திருட்டு

கோடம்பாக்க்ததைச் சேர்ந்தவர், கமலக்

கண்ணன், 26; தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது வீட்டில், நேற்று முன்தினம் காலை புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 3 சவரன் நகையை திருடி தப்பினர். கோடம்பாக்கம் போலீசார்

விசாரிக்கின்றனர்.

நுாதன முறையில் ரூ.2 லட்சம் பறிப்பு

சேலையூரை அடுத்த கோவிலாஞ்சேரியைச் சேர்ந்தவர், சீனிவாசன், 48; விவசாயி. நேற்று முன்தினம் மதியம், சேலையூரில் உள்ள வங்கியி

லிருந்து, இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.

ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் நின்ற போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், 10 ரூபாய் நோட்டு கீழே போட்டுவிட்டதாக, அவரது கவனத்தை திசைதிருப்பி, இரண்டு லட்சம் ரூபாய் பையை பறித்து தப்பினான். சேலையூர் போலீசார்

விசாரிக்கின்றனர்.

மொபைல் போன் திருடர்கள் கைது

காசிமேட்டைச் சேர்ந்தவர், அஜித், 20. இவர், நேற்று காலை, சூரியநாராயண சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.

 அதே போல், ராயபுரம் மேம்பாலம் வழியாக, சித்ரா, 31, என்பவர், நேற்று காலை நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.

இது குறித்து விசாரித்த, காசிமேடு மற்றும் ராயபுரம் போலீசார், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வன், 20, உட்பட இருவரை, நேற்று மதியம் கைது செய்து, மொபைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல்

செய்தனர்.

வழிப்பறி திருடர்கள் ஆறு பேர் கைது

கொளத்துாரைச் சேர்ந்தவர், ஸ்ரீதர், 16. நேற்று முன்தினம் மாலை, வெற்றி நகர் சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த ஆறு பேர் கும்பல், கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி, ஸ்ரீதரின், இரண்டு மொபைல் போன்களை பறித்து தப்பியது.

 திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில்,

தென்னரசு, 38, என்பவர், நேற்று காலை நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து, 1,500 ரூபாயை பறித்து தப்பியது.

இது குறித்து விசாரித்த, திரு.வி.க.நகர் போலீசார், திரு.வி.க.நகர் மயானத்தில் பதுங்கியிருந்த, வெங்கடேஸ்வரன், 20, உட்பட ஆறு பேரை, நேற்று மதியம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு

அரிவாள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

முதியவரை கொன்ற பெண் கைது

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர், சையது பசுருதீன், 62; திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பெரிய மசூதி எதிரே ஓதி வந்தார். 28ம் தேதி இரவு, ஓதுவதற்காக புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர், எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயன பொருளை, சையது பசுருதீன் மீது வீசிவிட்டு தப்பினார்.

இதில் படுகாயமடைந்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசுருதீன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையில், ஜாம்பஜாரைச் சேர்ந்த, நவீன் தாஜ் என்ற பெண், கொலை செய்தது தெரியவந்தது. நேற்று இரவு நவீன் தாஜை, போலீசார் கைது செய்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நவீன் தாஜ், சையது பசுருதீனை பார்த்து, தனக்கு உள்ள பிரச்சனைகளை கூறி உள்ளார். சையது பசுருதீன், 13 வாரங்கள் ஓதினால், பிரச்னை தீரும் என்று கூறி, பணம் வசூலித்துள்ளார். ஆனால், பிரச்னை சரியாக

வில்லை. இந்த ஆத்திரத்தில் நவீன் தாஜ், அவரை கொலை செய்தது தெரியவந்தது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X