குறைந்தது வாக்காளர் எண்ணிக்கை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

02 செப்
2018
00:31
பதிவு செய்த நாள்
செப் 02,2018 00:24

சென்னை:சென்னை மாவட்டத்தில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர்.சென்னை மாவட்டத்தில் உள்ள, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


இதை, மாநகராட்சி துணை கமிஷனர், லலிதா வெளியிட்டார்.மாவட்டத்தில், 3,768 ஓட்டு சாவடிகளும், இரண்டு துணை ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது, ஓட்டு சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில், 3,754 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், அதிகபட்சமாக, பெரம்பூர் தொகுதியில், 297 ஓட்டுச்சாவடிகளும், குறைந்தபட்சமாக, எழும்பூர் தொகுதியில், 169 ஓட்டு சாவடிகளும் உள்ளன.மேலும், 2018 ஜன., 10ல் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், 38 லட்சத்து, ஆயிரத்து, 919 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர்.


தொடர் வாக்காளர்திருத்ததில், 7,160 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 16 ஆயிரத்து, 953 வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், 37 லட்சத்து, 92 ஆயிரத்து, 126 வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் உள்ளனர்.

மேலும், சென்னையில், 19 லட்சத்து, 19 ஆயிரத்து, 582 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

இவை ஆண் வாக்காளர்களை விட, 47,944 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.


சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டல அலுவலகங்களில், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், 2001 ஜன., 1க்கு முன் பிறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் சேரவும், பெயர் நீக்கம், பட்டியலில் திருத்தம், சட்டசபை தொகுதி மாற்றம் போன்றவற்றுக்கு, மாநகராட்சி மண்டல அலுவலரின்

அலுவலகத்தில், அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், செப்., 9, 23, அக்., 7, 14 ஆகிய நாட்களில், சிறப்பு முகாம்களும் நடைபெறும்.லலிதா, பொறுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-செப்-201809:09:20 IST Report Abuse
Srinivasan Kannaiya கணக்கு வழக்கு சரியாக இருந்தால் மக்களும் மனசாட்சியுடன் நடந்தாலே இன்னும் குறையும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-செப்-201809:08:29 IST Report Abuse
Srinivasan Kannaiya apidiyaa
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X