ரயில்வே சுரங்கப்பாதை பணி: தாசில்தார் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

02 செப்
2018
01:57
பதிவு செய்த நாள்
செப் 02,2018 01:01

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் ரயில்வே சுரங்கப்பாதைப் பணிகளை தாசில்தார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஆளில்லா ரயில்வே கேட்டுகளை மூடி தேவையான இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி நெல்லிக்குப்பம் காமராஜ் நகர் பகுதியில் ரயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


அதனை தாசில்தார் ஆறுமுகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை எடுத்துச் செல்ல சாலை அமைத்த பிறகு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு, ரயில்வே நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார்.


கீழ்பட்டாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் எதிரே சாலையோரம் வாடகை ஆட்டோக்களை நிறுத்தி வந்தனர். இதனால் அவ்வழியே பெண்களும் மாணவிகளும் செல்ல சிரமமாக இருக்கிறது. மேலும், இரவில் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால், ஆட்டோக்களை நிறுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.


இந்நிலையில், காமராஜ் நகரில் சுரங்கப்பாதை பணியை பார்வையிட்டவர், கீழ்பட்டாம்பாக்கம் ஆட்டோ நிறுத்துவதற்காக ஏற்பட்ட சர்ச்சைக்குண்டான இடத்தை பார்வையிட்டார். பின்னர், இரு தரப்பினருக்கும் பிரச்னையின்றி தீர்வு காணப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.

நகராட்சி கமிஷனர் மகாராஜன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X