குமரி திக்குறிச்சி சிவன் கோவிலில்ஐம்பொன் சிலைகள் கொள்ளை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2018
03:00

நாகர்கோவில்:குழித்துறை அருகே, திக்குறிச்சி மகாதேவர் சிவன் கோவிலின் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலைகள், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.



கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சியில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, 12 சிவாலயங்களில், இக்கோவில் இரண்டாவது சிவாலயம் ஆகும்.



அதிர்ச்சி



ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவிலில், நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடிந்து, இரவு கோவில் நடை சாத்தப்பட்டது.நேற்று காலை கோவில் நடையை திறக்க வந்த பூசாரிகள், கோவிலின் முன்பக்க, உள்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்த போது, மூலவர் சன்னிதானம், நகைகள் பாதுகாப்பு அறைகள் உடைக்கப்பட்டிருந்தன.



அதிலிருந்த, 3 மற்றும் 2.5 கிலோ எடையுள்ள பழமையான ஐம்பொன் சிவன் சிலைகளும், 4 கிலோ எடையுள்ள ஐம்பொன் முருகன் சிலை, 4 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை மற்றும் நந்தி சிலைகளும் கொள்ளை போனது தெரியவந்தது.



விசாரணை



மேலும் தங்க மாலைகள், ருத்ராட்சம், பொட்டு, வெள்ளி திருமுகம், ஆராட்டுக்கு பயன்படும் வெள்ளி கொடை, உண்டியல் பணம் உட்பட, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயின.கோவில் நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் படி, மோப்ப நாயுடன் வந்த போலீசார், கோவில் பூசாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

கோவிலில் பொருத்தப்பட்ட, கண்காணிப்புகேமராவில் பதிவானகாட்சிகளை வைத்து, கொள்ளை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட இரண்டு தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
02-செப்-201808:46:32 IST Report Abuse
Amirthalingam Sinniah தன்னை களவெடுத்து விற்கபோகிறார்கள் என்று கடவுளே கண்டுகொள்ளாமல் இருக்கிறார்போல் தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-செப்-201806:24:43 IST Report Abuse
Bhaskaran அறநிலையத்துறை ஊழியர்களை. நன்கு விசாரியுங்கள் clue கொடுப்பதே அங்குள்ள பெருச்சாளிகள்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X