வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 எச்.எம்., உட்பட 4 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2018
07:03

திருவாரூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 23.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.



திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, பூந்தோட்டத்தைச் சேர்ந்தவர், முத்துராமலிங்கம். இவர், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி செல்வ பாக்ய செந்தில்குமாரி, அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை. இவரது உறவினர் அருண்பாக்ய ராஜ்குமார்; கனடாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சுப்புலட்சுமி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. இவர்கள், திருவாரூரைச் சேர்ந்த, சுகிர்தராஜ், 30, என்பவரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி, இவர்களிடம், கடந்த ஆண்டு, 23.50 லட்சம் ரூபாயை சுகிர்தராஜ் கொடுத்துள்ளார். ஆனால், எதிர்பார்த்தபடி வேலை வாங்கி தரவில்லை. வேலை கிடைக்காததால், பணத்தை திருப்பி தரும்படி சுகிர்தராஜ் கேட்டுள்ளார். பணம் கொடுக்காமல், நான்கு பேரும் ஏமாற்றியுள்ளனர்.புகாரையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், 23.50 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியது தெரிய வந்தது. இதில் தொடர்புடைய நான்கு பேரையும், நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு பேரும் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


 

மேலும் திருவாரூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X