இன்னும் இழுக்கும்! இரண்டடுக்கு மேம்பால பணி.  பணி ஒதுக்கீட்டில் இழுபறி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 செப்
2018
02:30
பதிவு செய்த நாள்
செப் 04,2018 02:28

கோவை:காந்திபுரம், நுாறடி சாலையையும், சின்னசாமிநாயுடு சாலையையும் இணைக்கும், இரண்டாம் அடுக்கு மேம்பால கட்டுமானப்பணிக்கான, டெண்டர் முடிவுக்கு வராததால், மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைவதில், தொய்வு ஏற்பட்டுள்ளது.

காந்திபுரத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், 195 கோடி ரூபாய் செலவில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நஞ்சப்பா சாலை, மத்திய சிறை முன்பு துவங்கி, ஆம்னிபஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடையும் வகையில், 1.75 கி.மீ., துாரத்துக்கு, முதல் அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த நவம்பரில் பயன்பாட்டுக்கு வந்தது. இரண்டாம் அடுக்கு மேம்பாலம், நுாறடி சாலை, 7வது வீதி அருகே துவங்கி, ஆவாரம்பாளையம் மின்மயானம் நவஇந்தியா சாலை அருகே நிறைவடைகிறது. இந்த இரண்டாம் அடுக்கு மேம்பாலக்கட்டுமானப்பணி, 1.75 கி.மீ., துாரத்துக்கு நடைபெறுகிறது.

முதல் அடுக்கு மேம்பாலத்துக்கு மேற்பகுதியில், இரண்டாம் அடுக்கு மேம்பாலத்துக்கான கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. அதன் மேற்குப்பகுதியில், பாலத்தை இணைப்பதற்கான கான்கிரீட் அமைக்கும் பணி நடக்கிறது.

ஆவாரம்பாளையம் சிக்னல் வரையே, மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நவஇந்தியா சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி 2019 மார்ச் மாதத்துக்குள், கட்டுமானப்பணியை முடிப்பது சந்தேகம்தான்.


'மார்ச்சுக்குள் சந்தேகமே'

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்(வடக்கு) ராம்வேல் கூறுகையில், ''புதிய நீட்டிப்பின்படி, 450 மீட்டர் தொலைவுக்கு, 18.5 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள பல நிறுவனங்கள், டெண்டரில் பங்கேற்றுள்ளன. டெண்டர் நிறைவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த நிறுவனத்துக்கும், பணி ஒதுக்கீடு செய்யப்படாததால், பாலம் நீட்டிப்பதற்கான பணி துவங்கப்படவில்லை. அதனால் மார்ச் இறுதிக்குள், கட்டுமான பணிகள் நிறைவடையுமா என்பது சந்தேகம்தான்,'' என்றார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Rogan - coimbatore,இந்தியா
04-செப்-201815:33:47 IST Report Abuse
M.Rogan கோவை S.I.H.S. காலனி பாலம் பல ஆண்டுகளாக இழுத்து கொண்டிருப்பதை தினமலர் கண்டுகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X