மதுரையில் ஓட்டுநர் உரிமம் தகுதி நீக்கம் 8509! : 6 விதிகளை மீறினால் 6 மாதத்திற்கு தடை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 செப்
2018
02:56

மதுரை;மதுரை நகரில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் 8509 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் போலீஸ் பரிந்துரைபடி வட்டார போக்குவரத்து அலுவலகங்களால் தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.


சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளின் உரிமங்களை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்ய இரு ஆண்டு களுக்கு முன் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.


இதன்படி சிக்னலை மதிக்காமை, அலைபேசியில் பேசியவாறே வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், சரக்கு வண்டியில் ஆட்களை ஏற்றிச்செல்வது, அதிவேகமாக ஓட்டுதல், அதிகபாரம் ஏற்றிச்செல்லுதல் ஆகிய விதிகளை மீறுவோரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுகின்றன.

நகரில் மதுரை வடக்கு, தெற்கு, மத்தி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இரு ஆண்டுகளில் இவ்வலுவலகங்கள் மூலம் 23 ஆயிரத்து 967 ஓட்டுநர் உரிமம் போலீஸ் பரிந்துரைபடி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவே விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாலோ 6 மாதம் வரை கூட ரத்து செய்யப்படுகின்றன.இந்தாண்டில் ஜூலை வரை 8,509 ஓட்டுனர் உரிமங்கள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.


போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


இந்நடவடிக்கையால் சாலை விதிகளை வாகன ஓட்டிகள் மீறுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட உரிமங்களை மூன்று மாதங்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு உரிமத்தில் ரத்து செய்யப்பட்ட காலத்தை குறிப்பிட்டு வாகன ஓட்டிகளிடம் வழங்குவர். இதன்மூலம் மறுபடியும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவது தடுக்கப்படும் என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
04-செப்-201808:48:48 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan விதியை மீறுவோருக்கு அபராதமின்றி சிறை தண்டனை தரணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X