மாநகராட்சி அமைத்த புதிய சாலைகளின் நிலை..பரிதாபம்!.  ஒரே மாதத்தில் மண் குவியலாக மாறிய அவலம்:  மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய், 'ஸ்வாகா'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 செப்
2018
05:39
பதிவு செய்த நாள்
செப் 04,2018 05:24

மாதவரம்:மாதவரம் மண்டலத்தில், மாநகராட்சி மூலம் அமைக்கப்படும் புதிய தார் சாலைகள்,

ஒரே மாதத்தில் மண் குவியலானது.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் மற்றும் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


மண்டலத்தின், 25வது வார்டு, புழல் அடுத்த பத்மாவதி நகர், பாலாஜி நகர், பிர்லா அவென்யூ, ஜெய்மாருதி நகர் சுற்றுவட்டாரங்களில், சுப்ரமணி, குமார், ராமாராவ், கன்ஸ்ட்ரானிக்ஸ் லிட்., ஆகிய நான்கு ஒப்பந்ததாரர்கள் மூலம், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், 44 தார் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


அங்குள்ள குறுக்கு சாலைகள், 300 அடி முதல், 800 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்டவை. பிரதான சாலைகள், 1,200 அடி நீளம், 24 அடி அகலமும் கொண்டவை.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள், பாதாள சாக்கடை திட்டப்பணியால், மண் குவியலாகின.


இந்நிலையில், கடந்த மாதம், பத்மாவதி நகர் பிரதான சாலை, 6, 7, 8, 9, 10 ஆகிய தெருக்கள் உட்பட, எட்டு தெருக்களின் குறுக்கு சாலைகள், 1.10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டன.

ஆனால், அந்த சாலைகள், ஆங்காங்கே சேதமடைந்து மண் குவியலாக மாறிவிட்டன. அவற்றில், கடந்த வாரம், தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.ஆனாலும், சாலைகள் உறுதியற்ற நிலையில், உருக்குலைந்து வருகின்றன. ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தால், மிச்சமுள்ள சாலையும், மண் குவியலாகி விடும் நிலை ஏற்பட்டுஉள்ளது.


மேலும், தார் வேயப்படாத சாலைகள், சேறும், சகதியும் நிறைந்து, போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.இதனால், பத்மாவதி நகர் சுற்றுவட்டாரங்களில் வசிப்போர், இரவு நேரங்களில், அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

மேலும், பிர்லா அவென்யூ, பாலாஜி நகர், ஜெய்மாருதி நகர்

உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை.

சென்னை மாநகராட்சி கமிஷனர், மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தால், அவற்றின் தரம் தெரியவரும்.


எங்கள் பகுதிகளில், அவசர கோலத்தில், சாலைகள் போடப்படுகின்றன. 2015ம் ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டும் பெருக்கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அருகில் உள்ள, பொதுப்பணித்துறை உபரிநீர் கால்வாய் நிரம்பினால், வெள்ளம் பெருக்கெடுத்து, இங்குள்ள நகர்களை மூழ்கடிக்கும். அப்போது, புதிய தார் சாலைகள் ஒன்று கூட இருக்காது. தற்போது, சிறிய ரக வாகனங்கள் சென்று வரும் நிலையிலேயே, ஆங்காங்கே சேதமடைந்துள்ளன.

பொதுமக்கள், பத்மாவதி நகர், புழல்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-செப்-201808:59:46 IST Report Abuse
Srinivasan Kannaiya திராவிடனின் மாய்மாலம்
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
04-செப்-201806:36:25 IST Report Abuse
Amirthalingam Sinniah ஒரு விசித்திரமான முறையில், காலால் மண்ணை பரவி தெருக்கள் அமைக்கிறார்கள்போலும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவினுடையதுதானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X