இரட்டைமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால்... மானியம் ரத்து! நடவடிக்கையும் உறுதி என ஆட்சியர் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
01:22

திருவள்ளூர்:பழவேற்காடு ஏரி மற்றும் கடலோர பகுதிகளில், இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தால்,மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் உதவிகள் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரித்துள்ளார்.



திருவள்ளூர் மாவட்டத்தில், திருவொற்றியூர் முதல், பழவேற்காடு வரை, 29 கி.மீ., கடலோர பகுதி. கடலோர முகத்துவாரமான பழவேற்காடு வழியாக, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

திருவொற்றியூர், எண்ணுார் முதல், பழவேற்காடு வரை உள்ள கடலோர மீனவ கிராமங்களில், 100க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகுகள் பயன்படுத்தி, கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.



சிறிய அளவிலான படகு, கட்டுமரங்களில் கடலுக்குள் சென்று பாரம்பரிய முறையில், 'மத வலை'யை பயன்படுத்தி, மீன்களை பிடிப்போரும் உள்ளனர்.பிடிபடும் மீன்களை, காசிமேடு, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று, மீன் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.



பல மடங்கு சிக்கும்



ஆனால், பைபர் மற்றும் விசைப் படகுகள் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி, கடலுக்குச் சென்று மீன்களை பிடிக்கின்றனர்.

வலைகளில், பெரிய மீன்கள் மட்டும் குறைந்த அளவே கிடைக்கும். ஆனால், சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளில், பல மடங்கு அதிகமாக சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை சிக்கும்.



ஒரு இரட்டைமடி வலையை பயன்படுத்தினால், ஆறு மாதங்களில் பிடிக்க வேண்டிய மீன்கள், ஒரே நாளில் கிடைத்து விடும்.இரட்டைமடி வலை வீசப்பட்ட பகுதியில், மீன் குஞ்சுகள் ஒன்று கூட இருக்காது. மீண்டும் அங்கு மீன்கள் வளர பல மாதங்களாகும்.இதன் காரணமாக, கடலில் மீன்வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த வகை வலையில் மீன் பிடிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது.



இருப்பினும், சில இடங்களில் இரட்டை மடி, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்களை பிடிப்பது தொடர்வதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, இந்த வகை வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க கூடாது என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.



இயற்கை சூழல் பாதிப்பு



இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மகேஸ்வரி ரவிகுமார் கூறியதாவது:தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும் போது, அதிக கடற்பரப்பு மீன்பிடிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல வகை மீன்கள் அதிகளவில் பிடிபடும். இதனால், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலை பாதிக்கப்படும்.மேலும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால், மீனவர்களிடையே பிரச்னை மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.



தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், அரசால் வழங்கப்படும் டீசல் மானியம் மற்றும் இதர உதவிகளும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



மீனவர்கள் வரவேற்பு



ஒரு இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலையை அரை கி.மீ., வரை விரிக்க முடியும். சாதாரண வலையில், 5 டன் கிடைத்தால், இதில், 50 டன் மீன்கள் சிக்கும். இதனால், கடலில் மீன் வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் குறிப்பாக, சிறிய அளவிலான மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அரசின் இந்த அறிவிப்பு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் காக்கும்.


மாவட்ட மீனவர் சங்க நிர்வாகி

 

மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X