வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் அதிகாரிகள் குழு...ஆய்வு! பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
01:44

கடலுார்:கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழுவினர் நேற்று சேதமான பயிர்களை ஆய்வு செய்தது.



கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து விட்டது. அதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.



மேட்டூர் அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு, முக்கொம்பு வழியாக கீழணை, கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தோடியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து இரு கரைதொட்டு வெள்ளம் பாய்ந்தது.



தொடர்ந்து 5 நாட்கள் ஓடிய வெள்ளத்தில் 8 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாணது. அதைத் தொடர்ந்து 26ம் தேதி மீண்டும் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கனஅடி தண்ணீர் ஓடிச்சென்று கடலில் கலந்தது. மொத்தத்தில் 90 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.



கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடக் கரையோர கிராமங்களான குமாராட்சி ஒன்றியம் பகுதிகளில் பெராம்பட்டு, கீழகுண்டலவாடி, திட்டுக்காட்டூர், பாழையநல்லுார், அகரநல்லுார், வீரன்கோவில் திட்டு உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை, வாழை, மரவள்ளி, நெல் போன்ற பயிர்கள் சேதமடைந்தன.



குறிப்பாக 3000 ஏக்கரில் நடவு செய்து அறுவடை தருணத்தில் திடீரென வெள்ளம் பாய்ந்ததால் நெற்பயிர்கள் அழுகின. அவசர கதியில் கூட அவர்களால் அறுவடை செய்து எடுத்து வரமுடியவில்லை. வெள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறச்சென்ற, அமைச்சர் சம்பத், மக்கள் பிரதிநிதிகளிடம் கிராம மக்கள் இழப்பீடு கோரினர்.



அதனைத் தொடர்ந்து கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் வேளாண் அதிகாரிகள், பிரதமர் இன்ஸ்சூரன்ஸ் திட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், வெள்ளம் பாதித்த ஒரு பகுதியில் மட்டும் இழப்பீடு வழங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு, இந்த குழுவினர் நேற்று, குமராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X